Saturday, January 24, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சீனர்களும் உழைப்பும்) - பாகம் 5


மஞ்சள் நதிக் கரை கலாச்சாரம்

4,500 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த சீனர்களின் 'மஞ்சள் நதி கரையோர' கலாச்சாரத்தைப் பற்றி எடுத்துக் கூறும் அதே வேலை, சரித்திர ஆராச்சியாளர்கள் அந்த காலக் கட்டத்தில் அந்த பிரதேசங்களில் நடந்த பெரும் வெள்ளங்களைப் பற்றியும் எடுத்துறைகின்றனர்.

அன்றைய காலக் கட்டத்தில் இருந்து இன்றைய தேதி வரை சீன தேசத்தவர்கள் மஞ்சள் நதி பெருக்கெடுப்பால் மாறி, மாறி வந்த வெள்ளங்களினாலும், அவற்றை அடுத்து வந்த பஞ்சங்களினாலும் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் அந்த கரையோர பிரதேசங்களில் வாழ்ந்த சீனர்களின் வாழ்க்கை நிலை என்றுமே கடினமான ஒன்றாகத் தான் இருந்திருக்கின்றது.

பஞ்சங்கள் ஏற்படுத்திய கஷ்ட நிலையில் இருந்து விடுபடவும், விட்டு வந்த உறவினர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் வேண்டி பல சீன இளைஞர்கள் தென் சீன பிரதேசங்களில் இருந்து வேலையும், நல்ல வாழ்வும் தேடி தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதற்கும் கூலி ஆட்களாகவும், வர்த்தகர்களாகவும் 19ஆம் நூற்றாண்டு கடைசியிலும், 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் பெரிய எண்ணிக்கையில் வர தொடங்கியுள்ளனர்.

இப்படி வந்த சீனர்கள் அன்றைய சீன நாட்டு சூழ்நிலை இயல்பாக அவர்களிடையே வளர்ந்திருந்த சில குணாதிசியங்களையும், சீன பின்னனியில் அவர்கள் கற்றுக் கொண்ட பல வாழ்க்கை அனுகு முறைகளையும் அவர்களோடு சேர்த்து தாங்கள் குடியேறிய நாடுகளுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

வெள்ளம், பஞ்சம் போன்ற பேரிடர்கள் போக பிற மன்னர்களின் படையெடுப்பால் ஒய்வின்றி நடந்த போர்கள், வரி வசூலிப்பு என்கிற பேரில் சாதாரண மக்களின் ரத்தத்தை உறுஞ்சிய சிற்றரசர்கள், ஊழல் மிகுந்த அரசாங்க நிர்வாகஸ்தர்கள் என்று சராசரி சீனர்களின் அன்றாட வாழ்க்கையே ஒரு பெரும் பிரச்சனையானதாகவே இருந்திருக்கின்றது.

இப்படிப்பட்ட அன்றைய சீன நாட்டு சூழ்நிலையில் வாழ ஒருவருக்கு நல்ல உடல் வளமும், மன உரமும் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. அதையும் மிஞ்சி சிற்றசர்களையும், அதிகாரிகளையும் எப்படி சமாளிப்பது, அவர்களை கவர்ந்து, தங்களுக்கு தீங்கு நேராமல் எங்கனம் பாதுகாத்து கொள்வது, என்பன போன்ற வித்தைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தால்தான் ஒரு மனிதன் அவன் குடும்பத்துடன் அன்றைய சீன நாட்டில் ஒரளவுக்காவது நிம்மதியாக வாழலாம் என்ற நிலைமை இருந்திருக்கின்றது.

இப்படி அன்றைய அன்றாட வாழ்க்கைக்காக சீனர்கள் தங்கள் சொந்த நாட்டில் கற்றுக்கொண்ட வித்தைகள் காலப் போக்கில் அவர்கள் குடியேறிய பிற நாடுகளில் தொழில் புரிவதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. இதனால்தான் இன்றும் சீனர்கள் விருந்துபசரிப்பிலும், கேளிக்கைகளை முக்கியஸ்தர்களுக்கு அறிமுக படுத்துவதிலும், பரிசுகள் கொடுத்து பிறரை கவர்வதிலும் பெரும் வித்தகர்களாக உள்ளனர்.




சீனர்கள் கடின உழைப்பாளிகள்

சீனர்கள் மிக மிக கடினமான உழைப்பாளிகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர் பள்ளியில் படிக்கும் மாணாக்கராக இருந்தாலும் சரி, கடையில் வேலை செய்யும் சிப்பந்தியாக இருந்தாலும் சரி, காரியாலயத்தில் பணிபுரியும் நிர்வாகியாக இருந்தாலும் சரி, ஒரு பெரிய ஸ்தாபனத்தை வழிநடத்தும் தொழில் அதிபராக இருந்தாலும் சரி, சீனர்களில் பெரும்பாலோர் மிக கடின உழைப்பாளிகளாக தான் இருப்பார்கள்.

கடின உழைப்பு என்பது சீனர்களிடமுள்ள மிக மிக அடிப்படையான ஒரு கூறு. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 90 கோடி பல இன மக்களிடமும் சென்று, இங்கு அவர்களோடு வாழுந்து வரும் சீனர்களை ஒரே ஒரு வார்த்தையில் சித்தரிக்கும்படி கூறி ஒரு ஆய்வு நடத்தினால், அதற்கு கிடைக்கும் பதில் "உழைப்பாளிகள்" என்பதாக தான் இருக்கும்.

தமிழர்கள் பேச்சுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதை விட அதிக அளவு முக்கியத்துவம் சீனர்கள் உழைப்புக்கு கொடுக்கிறார்கள். தமிழர்கள் அதிகம் பேசுவது குறித்து ஒரு வயோதிக சீனர் ஒரு முறை என்னிடம் கூறியது: "பேச்சு என்பது விழை குறைந்த ஒன்று. யார் வேண்டுமானாலும் பேசலாம், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அதற்கு அறிவும் தேவையில்லை, முதலும் தேவையில்லை. ஆனால் உன்னை உலகம் எடைபோடுவது உன் பேச்சை வைத்தல்ல. நீ இன்றுவரை என்ன செய்திருக்கிறாய், என்ன சாதித்திருக்கிறாய் எனப்தை வைத்து" என்றார்.

உண்மைதானே! நாம் சாதனையாளர்களா, இல்லையா என்பதற்கு அடையாளம் மற்றவரோடு ஒப்பிடும்போது நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்பதை பொருத்து தானே இருக்கிறது. வீட்டுக்குள்ளே நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு உட்காந்து இருக்கலாம், ஆனால் என்று கல்வி காரணமாக, வேலை சாரணமாக வீட்டை விட்டு வெளியே வருகிறோமோ அப்பொழுதே, நாம் மற்றவரின் பார்வைக்கும், எடைபோடலுக்கும் ஆளாகி விடுகிறோம் அள்ளவா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது - "You judge yourself by what you think you can do. Others judge you by what you have already done". அதாவது, "நீ உன்னை எடை போட்டுக் கொள்ளும் போது உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து எடை போட்டுக் கொள்வாய். ஆனால் உலகம் உன்னை எடைபோடும் போது, நீ இதுவரை என்ன செய்திருக்கிறாய் என்பதை வைத்தே எடை போடும்" என்பதுதான் அதன் தமிழாக்கம்.



வெளிநாட்டு சீனர்களின் பொருளாதார நிலைப் பாடு

சீனாவை விட்டு இதர நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குடியேறிய சீன வம்சாவளியினரின் ஒட்டு மொத்த பெயர் 'வெளிநாட்டுச் சீனர்கள்' (OVERSEAS CHINESE) என்பது.

இவர்கள் ஒரு அதி அட்டகாசமான, திறமைமிக்க வகுப்பினர். உலகம் முழுவதும் என்று பார்த்தால், சுமார் நான்கு கோடிப் பேர் இருப்பர். இந்த கூட்டத்தின் ஒட்டு மொத்த தனியார் பொருளாதார வளம் US$ 1,500 பில்லியன் (150,000 கோடி US$) என்று ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிகாரபூர்வ அமெரிகக ஆய்வு காட்டியது. ஆதாவது ஒவ்வொரு வெளிநாட்டு சீனருக்கு RM. 37,500 சராசரி வளம் உள்ளது. நம்ப முடியவில்லையா ? ஆனாலும் நம்பத்தான் வேண்டும் .

மாதிரிக்கு, கீழே தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் சீனர்களின் ஜனத்தொகை விழுக்காடும், அதை அடுத்து அந்தந்த நாடுகளில் சீனர்களின் பொருளாதார பங்கீட்டின் விழுக்காடும் கொடுத்திருக்கிறேன்:-

1. மலேசியா - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 24 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %

2. இந்தோனீசியா - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 3 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %

3. பிலிப்பீன்ஸ் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 2 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 40 %

4. வியட்நாம் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 2 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 40 %

5. தாய்லாந்து - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 12 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %

6. சிங்கப்பூர் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 75 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 80 %




சீனர்களின் வியாபார இயல்புகள்


சீனர்கள் அந்தந்த நாள் வேலையை அந்தந்த நாளே முடிக்கும் இயல்பு உடையவர்கள். குறிப்பாக கடை வைத்திப்பவர்கள் மறுநாள் வந்து கடையை திறந்து வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது, முதல் நாள் வேலையில் தங்கி போன மீதி வேலை எதுவுமே இருக்க கூடாது என்கிற நடைமுறை பழக்கத்தை பின்பற்றுபவர்கள்.

உதாரணத்திற்க்கு இங்குள்ள சீன உணவகங்கள் இரவு 10.30 மணிக்கு ஆர்டர் எடுப்பதை நிறுத்தி கொண்டு, பாத்திரங்களை கழுவுவதும், சமையற்கட்டை சுத்தம் செய்வதுமாக இருப்பார்கள். பிறகு எல்லா வாடிக்கையாளர்களும் உணவகத்திலிருந்து கிழம்பிய பிறகு மேசை நாற்காலிகளை எல்லாம் ஓரமாக தள்ளி வைத்து விட்டு, உணவத்தை கூட்டி பெருக்கு, கழுவி சுத்தம் செய்துவிட்டு, மறுநாள் வந்தவுடன் வியாபாரத்தை ஆரம்பிக்க ஏதுவாக எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்து விட்டு அவரவர் வீடு திரும்புவதற்கு்வதற்கு 12.00, 12.30 மணியாகும்.

பிறகு மறுநாள் பார்த்தால் சுத்தமான உடை உடுத்தி, சவரம் செய்து, நன்றாக தலைவாறி, பார்ப்பதற்கு பலிச்சென்று வியாபார ஸ்தலத்தில் அன்றைய வியாபாரத்திற்கு தயாராக புன்முறுவலுடன் நிற்பர். இது பெரிய, சிறிய வியாபாரம் என்கிற வித்தியாசம் எல்லாம் இல்லாமல், அத்தனை சீன வியாபாரிகளாலும் கடை பிடிக்க படும் ஒரு சாதாரண தடைமுறை அம்சம்.

ஆனால் இவர்களின் இந்த கூறுகளை எல்லாம் நூறு வருடங்களுக்கு மேலாக தினமும் பார்த்து வளர்ந்த இந்த நாட்டிலுள்ள பிற இன வியாபாரிகள் இவற்றை இன்றைக்கும் கடை பிடிப்பது கிடையாது.

இதில் இந்தியர்கள் நடத்தும் உணவு விடுதிகளின் இயல்புதான் மிகவும் மோசமானதாக இருக்கும். இங்குள்ள பெரும்பாலான இந்திய உணவு விடுதிகளில் வேலை செய்வோர் இந்தியாவில் இருந்து வந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களுக்கு நம் மலேசிய இந்திய உணவு கடை முதலாளிகள் முறையான சம்பளம் கொடுக்காதது மட்டுமில்லை, அவர்கள் ஓய்வு எடுக்க போதுமான நேரமும் வழங்குவதில்லை.

நடைமுறையில் இதன் தாக்கம் என்னவென்றால், இந்திய உணவுக் கடை ஊழியர்கள் எப்பவும் வேர்வை நாற்றத்துடன், சவரம் செய்யப்படாத முகங்களுடன், முகத்தில் சிறிதுகூட கலை இல்லாது ஏதோ கடைமைக்கு பவனி வருபவர்கள் போல் காட்சி அளிப்பதுதான்.

(இங்கு சீனர்களைப் பற்றி பெருமையாக எழுதுவதும் , அதே நேரத்தில் தமிழர்களின் முட்டாள்தனத்தை அப்பட்டமாக விமர்சிப்பதும் பலருக்கு பிடிக்க வில்லை என்று எனக்கு தோன்றுவதால், நான் சொல்ல விரும்பும் பலவற்றை சுருக்கி கொண்டு வருகிறேன். அந்த வகையில், இந்த பகுதிக்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கொடுத்து விட்டு அடுத்த பகுதிக்கு செல்கிறேன்).




சீனர்கள் வியாபாரத்தில் கடுமையான போட்டியாளர்களும் கூட

சீனர்கள் வியாபாரத்தில் மிக கடினமான போட்டியாளர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது சீனாவில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள 'வெளிநாட்டு சீனர்களுக்கும்' பொருந்தும்.

போட்டி என்று வந்து விட்டால் அடுத்தவரை நிலைபெற சீனர்கள் விடவே மாட்டார்கள். அதற்கு இங்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கோடி காட்டிவிட்டு செல்கிறேன்.

இந்தியாவிலிருந்து, குறிப்பாக தெற்கு மாநிலங்களிருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் வருடாவருடம் மலேசியாவினுல் எனக்கு தெரிய 40-50 வருடங்களாக இறக்குமதி ஆகிகொண்டு இருக்கின்றது. ஆனால் இதை இறக்குமதி செய்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள். ஆம், சீன வியாபாரிகள்தான்.

இந்த வியாபார்த்தினுல் நுழைய எத்தனையோ மலேசிய இந்திய வணிகர்கள் முயன்றிருக்கின்றனர். அப்படி நுழைய முற்பட்ட எந்த இந்திய வியாபாரியையும் சீனர்கள் நிலை பெற விட்டதில்லை.

இந்திய வியாபாரி ஒருவர் வெங்காயத்தை இந்தியாவிலிருந்து தருவிக்க விளைகிறார் என்று தெரிந்த உடனேயே, சீன வியாபாரிகள் தங்களின் விலையை இங்கு குறைத்து விடுவார்கள்.

இறக்குமதி செய்ய முற்பட்ட இந்திய வியாபாரியும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல், வாங்குவதற்கு ஆள் இல்லாமல், கடைசியாக வேறு வழி தெரியாமல், சீன வியாபாரிகளிடமே தாங்கள் கொண்டு வந்த சரக்கை கை மாற்றி விட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டு விடுவர்.

இது குறித்து மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. தங்களின் வெங்காய வியாபாரத்தை முறையாக, பல காலம் தொடந்து செய்ய வெண்டும் என்று நினைத்த ஒரு மலேசிய சீன வியாபார குடும்பம், தம் மகன்களில் ஒருவரை நிரந்தரமாக தென் இந்தியாவில் குடிபுக வைத்து, அவருக்கு ஒரு தென் இந்திய பெண்ணையும் கல்யாணம் செய்து வைத்துள்ளார்கள். அவர் குடும்பமும், குட்டியுமாக பல காலம் இந்தியாவில் வசித்தும் வருகிறார்.

(இத்தோடு சீனரக்ளை ஒப்பிட்டு எழுதுவதை நான் நிறுத்தி கொள்கிறேன். அடுத்து வரும் இரண்டு பாகங்களும் "என் பார்வையில் மலேசிய தமிழர்களின் பிர்ச்சனைக்கான தீர்வுகள்" என்பதை சாராம்சமாக கொண்டவையாக இருக்கும். அதற்கு பிறகு இந்த ஊடகத்தில் எதையும் எழுத நான் நினைக்க வில்லை. அத்தோடு வேலை நிமித்தமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு நான் வெளி நாடு போக வேண்டி இருப்பதால், என் அடுத்த பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி வாக்கில் தான் இருக்கும்).





10 comments:

Sathis Kumar said...

சிந்தித்து செயல்பட வேண்டிய கருத்துகளை வழங்கி வருகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள், அடுத்த தொடரை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.

சாமான்யன் said...

வாருங்கள் ததீசு,

வந்து, படித்து, பின்னூட்டம் விட்டுச் சென்றதற்கு நன்றி.

சீனர்களுக்கு எந்த அளவு உழைப்பு முக்கியமோ, அந்த அளவு நம் இனத்தினருக்கு பொழுது போக்கு முக்கியமாக உள்ளது. ஏன் என்றால், பொழுது போக்கிற்க்கு நாம் புத்தியை உபயோகிக்க வேண்டியது இல்லை.

அதனால் தான் நம் இனம் சினிமா, டிராமா, சீரியல், பட்டி மன்றம், கலை நிகழ்ச்சி, கோவில் திருவிழா, கலாச்சார நிகழ்வுகள், சமயம் என்ற பாதையிலேயே போய் கோண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் நடுவில், நேரம் கிடைக்கும் போது, நேரம் கிடைத்தால் தான் நாம் நடைமுறை வாழ்க்கையை பற்றியே யோசிப்போம்.

நடைமுறை வாழ்க்கையை தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப் படாதவர்கள் சீனர்கள். அதனால் தான், அவர்கள் வாழ்க்கையின் எல்லா பரிநாமங்களிலும் ஜெயித்து வருகிறார்கள்.

இந்த உண்மையை அறிந்து கொள்வதற்க்கு ஆழ்ந்து சிந்திக்க கூடிய என் போன்ற தமிழர்களுக்கே 50 வருடம் ஆகியது. இது போன்ற நான் அநுபவத்தில் கண்ட எத்தனையோ உண்மைகளையும், சிந்தனைகளையும் நம் இனத்தோடு பகிர்ந்து கொள்வோம் என்கிற நினைப் போடே இந்த ஊடகத்தை ஆரம்பித்தேன்.

ஆனால், இங்கு நான் பார்ப்பதெல்லாம் நாளையை பற்றி கவலைப் படாத ஜாலியான ஒரு இளஞர் கூட்டத்தையும், 'சமயம், இனம், மோழி' என்று ஆயிரக் கணக்கான வருடங்களாக நாம் அறைத்த அதே மாவை அறைத்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் கூட்டத்தையும் தான் (இதற்கும் ஆழ்ந்த சிந்தனை ஒன்றும் தேவை இல்லை).

அத்தோடு இங்கு (மலேசிய தமிழ் இனைய வலையில்) தைரியம் குறைவாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

இங்கு நான் எழுதும் கட்டுரைகள் போல் மலேசியாகினி போன்ற ஆங்கில இனைய ஊடகங்களில் எத்தனையோ ஆங்கில பதிவுகளை எழுதியிருக்கிறேன். உடனே என் எழுத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தோ, ஆமோதித்தோ மறுமொழிகள் வந்து குவிந்து விடும்.

இங்கு என்னாடா என்றால் ஒவ்வொரு பதிவையும் 50 க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். ஆனால், ஒர் இருவரைத் தவிர யாரும் மறுமொழி இடுவது இல்லை.

ஏன்? "பயம்" ..... பூச்சாண்டி இந்த வலைப் பதிவை மோனிட்டர் பண்ணி, வந்து சென்ற நம்மளையும் வீட் தேடி வந்து விட்டான் என்றால் .... ஆத்தாடி, எதுக்கு வம்பு !!!

நான் வாழ்க்கையை அட்டகாசமாக ஜெயித்த தமிழன் சார் ! இங்கு வந்து தங்க தாம்பாலத்தை வைத்து யாரையும் அழைத்து வந்து திருத்த வேண்டும், வழி காட்ட வேண்டும் என்கிற நினைப் பெல்லாம் எனக்கு இல்லை. ஆங்கில பதிவு ஒன்றை எழுதுவதற்கு எனக்கு மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் ஆகும். அனால் இங்கு நான் எழுதுகிற பதிவுகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து, தமிழில் எழுதி முடிக்க எனக்கு சராசரி 8 மணி நேரம் ஆகிறது.

நம் இனத்தினுடைய வண்ட வாளம் அவ்வளவுதான். பத்தில் இருவர் எதோ தேருவர். அதில் ஒருவர், மற்றவரை பார்த்து பார்த்து கத்து கொள்வார். அம்புட்டுதேங் !!

சாமான்யன்

சுப.நற்குணன்,மலேசியா. said...

சீனர்களிடையே காணும் உழைக்கும் குணத்தை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுகள் அன்பரே. நம் தமிழர்களுக்கு இதுவெல்லாம் நல்ல வழிகாட்டியாக அமைய வேண்டும்.

//ஆனால், இங்கு நான் பார்ப்பதெல்லாம் நாளையை பற்றி கவலைப் படாத ஜாலியான ஒரு இளஞர் கூட்டத்தையும்,//

உங்களோடு உடன்படுகின்றேன்.

//'சமயம், இனம், மோழி' என்று ஆயிரக் கணக்கான வருடங்களாக நாம் அறைத்த அதே மாவை அறைத்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் கூட்டத்தையும் தான் (இதற்கும் ஆழ்ந்த சிந்தனை ஒன்றும் தேவை இல்லை).//

உங்களோடு மாறுபடுகின்றேன். காரணம் இந்தப் பெரியவர் கூட்டம்தான் தமிழனின் அடையாளத்தை இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் குறிப்பிடும் பொருளியல் முன்னேற்றம் மிகவும் முக்கியம் என்பதை நான் மறுக்கவில்லை. அதற்காக மொழி, இன, சமய, பண்பாட்டுக் கூறுகளை அடைமானம் வைத்துவிட வேண்டுமா?

எல்லாரும் பொருளாதாரத்தியே துரத்திக்கொண்டு ஓடினால், மொழியின சமய நலத்தைக் காப்பது யார்?

சமுதாயம் என்பது பலதரப்பட்ட மக்களின் - பலதிறன்கொண்ட மக்களின் கூட்டமைப்பு ஆகும். சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவையான அரசியல், பொருளியல், குமுகவியல், கல்வியியல், மொழியியல்,ஆன்மவியல், வரலாற்றியல், எதிர்காலவியல் போன்ற துறைகளில் அந்தத துறைசார்ந்தோர் தத்தம் பணிகளைச் செவ்வனே செய்தால்தான் சமுதாயம் உருப்படும் - முன்னேறும்.

இவற்றுள் எதையேனும் ஒன்றை மட்டும் உயர்த்திப்பிடிப்பதும் மற்றதை ஒதுக்கித்தள்ளுவதும் முழுமையான முன்னேற்றத்திற்கு வழிகாட்டாது.

மேற்சொன்ன ஒவ்வொரு துறைசார்ந்தோரும் மற்றொரு துறையைச் சாடிக்கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்திக்கொண்டு, அவரவர் சார்ந்த துறையில் பணிசெய்வதை ஊக்கப்படுத்த வேண்டும் - ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்ய வேண்டும்.

//அத்தோடு இங்கு (மலேசிய தமிழ் இனைய வலையில்) தைரியம் குறைவாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.//

உண்மைதான். ஒருவேளை வலைப்பதிவர்கள் பெரும்பாலும் இளையோராக இருப்பதால் போதிய பட்டறிவு இல்லாமலும் சமுதாயக் கடப்பாடு புரியாமலும் இருக்கக்கூடும். அவர்களுக்கு வழிகாட்டினால், சிறந்த ஆற்றலாளர்களாக உருவாகுவார்கள்.

வலைப்பதிவு ஊடகத்தைச் சமுதயாத்தையே புரட்டிப்போடும் போர்வாளாக மாற்றிக்காட்ட முடியும். நம்மிடையே உலாவரும், ஓலைச்சுவடி, தமிழுயிர் போன்ற வலைப்பதிவுகள் இதற்கு நல்ல சான்று.

சாமான்யன் said...

வாருங்கள் நற்குணன் சார்,

வந்தமைக்கு நன்றி, பின்னூட்டத்திற்கும் நன்றி.

நாளை அதிகாலை நான் வெளியூர் பயணம் போகிறேன். சில நிமிடங்களுக்கு முன் தான் தங்களின் பின்னூட்டத்தை பார்த்தேன். தாங்கள் பெரியவர். தங்களின் அனுகுமுறையில் எனக்கு உடன்பாடு இருக்கிறதோ, இல்லையோ. தங்களின் வயதுக்கும், அநுபவத்திற்கும் மதிப்பளித்து தங்களுக்கு தக்க பதிலை கூற வேண்டியதை ஒரு சிறு கடமையாகவே கருதுகிறேன்.

அந்த வகையில் தங்களின் பின்னூட்டத்திற்கு என் பதில்:-

1)). இந்தியர்கள் மொத்தம் நூற்றிச் சொச்சம் நாடுகளில் குடிபுகுந்து வாழ்ந்து வருகிறார்கள். அதில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நாடுகளில் அவர்கள் நல்ல பொருலாதார நிலைப் பாட்டோடு, ஒரு மேம்பட்ட சமுதாயமாகவும் தான் வாழ்கிறார்கள். ஆனால் மலேசிய தமிழர்களான நாம் மீதி உள்ள, நலிந்துபோன 10 விழுக்காட்டு கட்டகரியில் தான் வருகிறோம்.

இத்தகைய சூழ்நிலையில் நமக்கு, இப்போதுள்ள அதி முக்கிய தேவை நம் இனத்தின் அன்றாட வாழ்க்கை நிலையில் முன்னேற்றம். அதற்கு நம்மை போன்று தமிழ் தெரிந்தவர் சிந்தித்து, சமுதாயத்தை சீர்திருத்தும், சீர்தூக்கும் என்னத்தோடு எழுத வேண்டும் என்பதுதான் எனது கடைப் பாடு.

மலேசிய சமுதாயத்தை பற்றி நம்மை போன்ற மலேசிய தமிழ் வழைப் பதிவர்கள் ஆழ்ந்து சிந்தித்து எழுதா விட்டால், வேறு யாரும் நமக்காக எழுதப் போவது கிடையாது.

மலேசிய இந்தியனைப் பற்றி, மலேசிய தமிழனை பற்றி, அவன் முன்னேற்றத்தில் அக்கரை கொண்டு தமிழில் எழுதக் கூடியவர்கள், அதற்கு தேவையான மொழி ஆற்றாலையும், அநுபவத்தையும் உள்ளவர்கள் மிஞ்சிப் போனால் ஒரு 50 பேர் தான் இனைய தளத்தில் இருப்போம்.

ஆனால் அந்த 50 பேரில் 30 பேர் மொழி, இனம், சமயம் என்று எழுதுவது யாரின் நலனுக்காக ?

தாங்கள் எழுதும் விஷயங்களைப் பற்றி எழுதத் தான் நம்மை ஒத்து தெளிந்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் ஆயிரக் கணக்கான பேர்கள் இருக்கின்றார்களே !

சந்தேகமாக இருக்கின்றதா, கூகல் இனையதளத்திற்கு சென்று "திருக்குறள் blog" என்ற இரு வார்த்தைகளை தேடும்படி சொடுக்கு இடுங்கள். தாங்கள் எழுதுவதை போல உலகம் முலுவதும் திருக்குறளை பற்றி எத்தனை தமிழர்கள் எழுதுகிறார்கள் என்பது தெரியும். சற்று முன்பு நான் சொடுக்கிட்ட போது எனக்கு 259,000 பதிவுகள் தெரிந்தன.

2)). //'ஒருவேளை வலைப்பதிவர்கள் பெரும்பாலும் இளையோராக இருப்பதால் போதிய பட்டறிவு இல்லாமலும் சமுதாயக் கடப்பாடு புரியாமலும் இருக்கக்கூடும். //' என்று எழுதியிருக்கிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தமிழன், பொதுவாக சிறிது பயந்தவன் தான் சார். என் முப்பதாவது வயதில் சூழ்நிலை காரணமாக நான் வழைகூடா நாடு ஒன்றில் ஒரு ஆறு வருடம் 5,000 ஊழியர்களை கொண்ட ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் ஒரு உயர் பதவியில் பொருப்பு வகிக்க வேண்டி வந்தது.

அப்போது என்னோடு பல நாடுகளில் இருந்து வந்திருந்த 36 இனங்களை சார்ந்தவர்கள் வேலை செய்தார்கள்.

இத்தகைய சூட்டுச் சூழலில் ஐந்தாறு வருடங்கள் ஒன்றாய் வசித்து, ஒன்றாய் ஒருவர் வேலை செய்யும் போது அவரின் எல்லா இயல்புகலும் வெவ்வேறு சமயங்களில் வெளி வந்து யாவரும் அறிய அம்பலமாகி விடும். அத்தகைய சூழ்நிலையில் நான் கண்ட தமிழன் பயந்த சுபாவம் கொண்டவனாக தான் இருந்தான். ஆனால் தமிழனையும் மிஞ்சி பயந்த சுபாவம் கொண்டவர்கள் மலையாளிகள். (அதனால் தான் மத்திய கிழக்கில் மலையாளி ஊழியர்களுக்கு அவ்வளவு மவுசு).

இந்த 36 இனக் கோஷ்ட்டியில் அதிக தெனாவெட்டு யாரிடம் இருந்தது என்று நினைக்கிறீர்கள்? 'பஷ்த்தூன்' என்று சொல்லப் பட்ட பாகிஸ்தானியர்களிடம்.

3)). என் அடுத்த அடுத்த பதிவுகள் தமிழ்ச் சமுதாய மேம்பாட்டிற்கான கருத்துக்களாக வடிவம் பெரும். அதன் கடைசியில் 'செட்டியாரிடம் படித்த பாடம்' என்று ஒரு பகுதியை எழுதலாம் என்று உள்ளேன். அது நிஷமாகவே என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்வு. என்னை மிக ஆழ சிந்திக்க வைத்த ஒரு நிகழ்வும்கூட. தாங்கள் அதை படிக்கும் போது தலையில் யாரோ கொட்டினால் போல் ஒரு பிரமை ஏற்படும். (எனக்கு ஏற்பட்டது). படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

கிருஷ்ணா said...

சபாஷ்! நல்ல படைப்பு. நல்ல எதிர்ப்பு.. இது போல் நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு!

//ஆனால், இங்கு நான் பார்ப்பதெல்லாம் நாளையை பற்றி கவலைப் படாத ஜாலியான ஒரு இளஞர் கூட்டத்தையும், 'சமயம், இனம், மோழி' என்று ஆயிரக் கணக்கான வருடங்களாக நாம் அறைத்த அதே மாவை அறைத்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் கூட்டத்தையும் தான் (இதற்கும் ஆழ்ந்த சிந்தனை ஒன்றும் தேவை இல்லை).//
இந்த சமுதாயத்தை பார்த்து பார்த்து மனம் நொந்து எழுதியிருக்கின்றீர். அதை என்னால் உணர முடிகிறது.

இன்னொரு விடயம் நண்பரே.. சீனர்கள் கடை வைத்திருந்தால்.. அவர்கள் பிள்ளைகள் அங்கே பள்ளி முடிந்ததும் வந்து சாதாரண வேலை செய்து தொழிலைக் கற்று கொள்வார்கள். படிப்பிலும் நல்ல நிலையில் இருப்பார்கள்.

ஆனால் நம்மவர்கள்.. பிள்ளைகளை கல்லாப்பெட்டியில் அமர வைப்பார்கள். அவர்கள் அங்கே அமர்ந்து வீட்டுப் பாடங்களைச் செய்து கொண்டிருப்பார்கள்! அங்கு தொழிலும் கெடுகிறது.. பிள்ளைகளின் எதிர்காலமும் கெடுகிறது! இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் யார் கேட்பார்கள்?

சாமான்யன் said...

வாருங்கள் கிருஷ்ணா,

வந்து, படித்து, பின்னூட்டமும் விட்டுச் சென்றதற்கு நன்றி.

கல்வி, வியாபாரம், சமூக இயல் என்று எல்லா நிலையிலும் மலேசிய தமிழர்களான நாம் பின் தங்கித் தான் இருக்கிறோம். நாம் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

ஆனால் இது நமக்கு மட்டும் உள்ள நிலைப்பாடு அல்ல, உலகம் முழுவதும் நம் இனத்தை போல் எத்தனையோ இனங்கள் தம்மை சுற்றி நடைபெறும் மாறுதல்களை முழுமையாக கிரகிக்க முடியாது, தம்மை சுற்றி நடக்கும் நிலழ்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது தத்தளித்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஓரளவாவது சிந்தித்து செயல் படக்கூடிய சில இனங்கள் ஏதோ அடுத்தவர் ஓட்ட வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாவிட்டாலும், ஓட்ட பந்தயத்தில் பங்கு பெறுக் கூடிய அளவிற்கு அடிப்படை வேகத்தையாவது பெற்று முட்டி, மோதி முன்னேறி விடுகின்றனர். அந்த சிலரில் நாமும் ஓர் இனமாக இர்ந்தோமானால் நன்றாக இருக்கும்.

இல்லையென்றால், உலகம் நம்மை தாண்டி எங்கோ போய் விடும். நாம் தலையைச் சொரிந்து கொண்டு, ஆகாயத்தை பார்த்துக் கொண்டு " பே...." என்று நின்ற இடத்திலேயே நிற்க வேண்டியது தான்.

இந்த தொடரை முடிப்பதற்கு நான் இன்னும் இரண்டு, மூன்று பதிவுகள் எழுத வேண்டி உள்ளது. பிப்ரவரி மாதம் மத்தியில் என் அடுத்த பதிப்பை பிரசுரிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்கிடையில் எனக்கு வேறு சில 'தலை போகிற' விஷயங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதால், இங்கு எழுதுவதில் என்னால் முனைப்பு காட்ட முடியவில்லை.

என் தற்போதைய வேலைகளை முடித்து கொண்டு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் என் அடுத்த பதிவை பிரசுரிக்கிறேன். அவசியம் படிக்க வாருங்கள். உங்கள் எதிர்பார்ப்பை மிஞ்சிய ஒரு படைப்பை கொடுக்க முயல்கிறேன்.

சாமான்யன்

Anonymous said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவில் பதிவில் அடி வைத்தேன். எனக்கு தர்ம அடி தான்னு சொல்லனும். என்ன காரணம்னு நினைக்கிறீங்களா? நம்மவர்களின் இன்னொரு பக்கத்தை அப்பட்டமாக காட்டியுள்ளீகள் அல்லவா? அதனால் தான். இந்நிலைக்கு அனைவருக்கும் பொறுப்பு உண்டு. அதனால்தான் எனக்கும் தர்ம அடி என்றேன். மாற்றம் ஒன்றே மாறாதது. உலகின் நியதி இதுதான். ஆனால் நம்மவர்களின் சிந்தனை மாற்றம் எதை நோக்கி போகின்றது? கல்வி, வியாபாரம், அரசியல்,அரசாங்கம் இத்துறைகளில் நம்முடைய கை ஓங்க வேண்டுமானால் கல்வி ஒன்றே பாலமாக செயல்படும். சாதாரண காப்பி கடையாக இருந்தது இப்போது எப்படி "white coffee shop" ஆனது? இன்னும் காப்பி கடை சீனர் பழைய முறையிலேயே வியாபாரம் செய்த்தனாலா? அவர் பழைய முறையில் வியாபாரம் செய்தாலும் அவருடைய பிள்ளைகள் எல்லாம் management,accounts,marketing துறைகளில் படிப்பார்கள்.பிறகு அப்பாவின் கடைக்கு வந்து சில காலம் பணி புரிவார்கள். அடிப்படை வலிகளை புரிவார்கள். அப்புறம் கொஞ்சம்-கொஞ்சமாக மாற்றத்தை உண்டு பண்ணுவார்கள். இது அல்லவோ மாற்றம் தரும் முன்னேற்றம். ஆனால் நம்மின மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்கு செல்லும் போது coca cola பானத்தில் உற்சாகத்தையும் சேர்த்துக் கொண்டு போகின்றார்களாம்..ஓர் ஆசிரியர் என்னிடம் ஒப்புக் கொண்டது...

சாமான்யன் said...

திருமூர்த்தி,

வந்து, படித்து, பின்னூட்டமும் விட்டுச் சென்றது குறித்து சந்தோஷம்.

நீங்கள் சொல்வது உண்மைதான் "மாற்றம் என்பதே மாறாதது" தான். ஆனால், வரும் மாற்றங்களை நாம் திறம்பட எதிர்நோக்குவதற்கு முன்பு, நமது தற்போதைய நிலைப் பாட்டில் நாம் நிலை பெற்றிருக்க வேண்டும்.

நமது பிரச்சனை என்ன வென்றால் - நாம் நமது தற்போதைய நிலைப் பாட்டையே புரியாமல் முட்டி, மோதி, இருட்டில் தட்டு, தடவிக் கொண்டு இருக்கும்போது, நாளை வரப் போகிற மாற்றத்தை நாம் எங்கனம் புரிந்து கொள்வது?

எப்படியோ நாம் ஒவ்வொருவரும் அவரவர் நிலையில், சிறிது பணம் ச்ம்பாதித்து கொண்டு, சட்டை, பேண்டு, ஷூ என்று மாட்டி கொண்டு 'நானும் மனிதன் தானடா' என்று பவனி வந்து கொண்டிருக்கிறோம். ஆழமாக இறங்கி எடை போட்டு பார்த்தால், நம்மில் 80 விழுக்காட்டினர் நடிகர் வடிவேலு சொல்கிறார் போல் "வெறும் டம்மி பீஸ்கள் தான்".

சாமான்யன் said...
This comment has been removed by the author.

Post a Comment