இந்த தொடரை அடுத்த இரண்டு பதிவுகளோடு முடித்துவிட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளேன். ஆதனால், இந்த பதிவோடு மற்றுமொரு பதிவு. அவை இரண்டிலும் உங்களோடு அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு சில முக்கிய விஷயங்கள். அத்தோடு 'சயோனாரா' (ஜப்பானிய மொழியில் 'விடைபெற்று கொள்கிறேன்' என்று பொருள்).
பண்டைய தமிழனும், இன்றைய தமிழனும்
உலகில் உள்ள முன்னேற்றமான இனங்கள் யாவுக்கும் சில பொதுவான அம்சங்கள் உண்டு. அவற்றில் மிக முக்கியமானது - 'தூரநோக்கு சிந்தனை'. முன்னேற்றமான உலக இனங்களுல் பிரதானமான ஜப்பானியர்கள், ஜெர்மானியர்கள், யூதர்கள் போன்ற இனங்களோடு நமக்கு பரிட்ச்சயமான பிராமணர்கள், நாட்டுகோட்டை செட்டியார்கள் போன்ற இந்திய சாதிய நிலையில் மேல்மட்ட தமிழர்களிடமும் இந்த 'தூரநோக்கு சிந்தனை' என்பதை நாம் வெகுவாக காணலாம்.
என்ன, இப்படிபட்ட மேல்மட்ட சாதிய வகுப்பினர் மலேசியாவில் மிக, மிக சொற்ப அளவில் உள்ளதால் அவர்களைப் பற்றி இங்கு உள்ள தமிழர்களுக்கு எதுவும் அதிகமாக தெரிய வாய்ப்பில்லாமலேயே போய்விட்டது. நம்மை போல் இந்த வகுப்பினரகளும் 'தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்று அவர்களுக்குள் குழுமும் போது சொல்லிக் கொள்பவர்கள் தான்.
ஏன் அந்த வாசகத்தை நமக்கு கொடுதத சுப்ரமணிய பாரதியே ஒரு பிராமணர்தான். அதேபோல், "வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது. வேலும் வாலும் தாங்கிய மரவர் வீழ்ந்ததும் கிடையாது" என்று வீராவேசமாக பாடிய கவியரசு கண்ணதாசன் ஒரு நாட்டுகோட்டை செட்டியார்.
ஆனால், இந்தகைய இனங்களுக்கும் மலேசிய தமிழர்களான நமக்கும் என்ன வித்தியாசம் என்றால், இவர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மை விட எல்லா வகைகளிலுமே மிக மேம்பட்ட நிலையில் இருந்து வந்திருப்பவர்கள். அவர்களுக்கு நேர மாறாக ஆயிரக்கணக்கான வருடங்களாக அடிமைபட்டு, கீழ் மட்டத்திலேயே கிடந்த நாம் இப்போது, ஒரு 100 வருட இடைவேளிக்குள் தான் 'அ, ஆ, இ, ஈ' க்கே வந்து சேர்ந்துள்ளோம்.
நாம் அடிக்கடி சொல்லிக் கொள்கிறோமே "கல் தோன்றி, மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி நாங்கள்" என்று, அந்த பண்டைய தமிழ் குடியின் வளர்ச்சிக்கு ஆணி வேராய் இருந்து ஆக்குவித்து, ஊக்குவித்து, ஆயிரக்கணக்கான வருடங்களாக தமிழ் கலாச்சாரத்தை வேர் ஊன்றச் செய்த பெருமை எல்லாம் பெரும்பாலும் இந்த இனங்களை ஒத்த மக்களுக்குத் தான் சாரும்.
இவர்களுக்கும், மலேசிய தமிழர்களான நமக்கும் தமிழர்கள் என்கிற ஒற்றை ஒற்றுமையைத் தவிர வேறு எந்த சமூகவியல் ஒற்றுமையும் கிடையாது. ("நாம ஒரு 60 - 70 வருஷங்களாகத் தானே அய்யா அக்குல்லிலே இருந்த துண்டை எடுத்து தோளில் போட ஆரம்பித்தோம் !!").
தமிழன் எல்லாவற்றிலும், எல்லோரிடத்திலும் தோற்றுப் போகிறான் என்கிற பொதுவான கூற்று இவர்களுக்கு பொருந்தாது. எனக்கு தெரிய பிராமணர்கள், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் போன்ற தமிழர்கள் எல்லாம் சீனர்கள், ஜப்பானியர்கள், ஜெர்மானியர்கள், யூதர்கள் என்று உலகில் உள்ள அத்தனை மேம்பட்ட இனங்களுடனும் வாழ்க்கையின் சகல பரிநாமங்களிலும் ஈடு கொடுத்து வெற்றிகாணக் கூடியவர்கள்.
ஆனால் என்ன, தமிழ் மக்களின் மொத்த ஜனத்தொகையில் இவர்களுடைய எண்ணிக்கை மிக, மிகச் சிறியதாக அமைந்து விட்டதாலும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெரும்பாண்மை ஓட்டுக்காக இவர்களை வேண்டுமேன்றே 60 வருடங்களுக்கு மேலாக ஓரங்கட்டியதாலும் இவர்களுடைய மூச்சு, பேச்சு எதுவுமே பொதுஜன சபைகளில் பரவலாக காணப் படுவதில்லை.
அதனால், மலேசியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி தமிழன் என்று சொல்லும் போது சராசரியாக ஒருவர் மனக்கண் முன் தோன்றுவது படிப்பறிவு, தொழில் அறிவு, சமூகவியல் என்று எல்லா அம்சங்களிலும் திறமை குன்றிய, மீசையும் ஒரு வார தாடியும் கூடிய, பொருந்தாத நிறத்தில் உடை உடுத்திக் கொண்டு நிற்கும் ஒரு பருமனான கருத்த உருவம் கொண்ட மனிதன் தான்.
ஆனால் தமிழ் கலாச்சாரத்தை ஆயிரக்கணக்கான வருடங்களாக வளர்த்து, அதன் மேன்மையை தூக்கி நிறுத்தும் பொருட்டு வள்ளுவம், சிலப்பதிகாரம், ராமாயணம், மகாபாரதம், செய்யுல்கள், பக்தி பாடலகள் என்று எண்ணில் அடங்கா வழிகாட்டு கலஞ்சியங்களை நமக்கு கொடுத்து தமிழ் கலாச்சாரத்தை காலங்காலமாக மெருகேற்றி கொண்டு வந்தவன் மேற்குறிப்பிட்ட இன்றைய சராசரி தமிழனின் பாட்டன் பூட்டன் அல்ல. இவன் வேறு. தமிழை காலங்காலமாக தூக்கி நிறுத்தி சேவை செய்து வந்துள்ள அந்த தமிழன் வேறு.
அந்த தமிழனிடம் திறமை, தூர நோக்கு சிந்தனை, விவேகம், சாமர்த்தியம், சபை உணர்ந்து, இடம் பொருள் ஏவள் அறிந்து நடக்கும் இயல்பு எல்லாம் இருந்தது. இன்று தமிழன் என்று முத்திரை குத்திக் கொண்டு நிற்கும் இந்த பருத்த உருவத்திற்கு ஒரு பொடலங்காயும் கிடையாது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக சமுதாயத்தின் விழிம்பில், கீழ் மட்ட வகுப்பின் வறுமையின் தாக்கத்தில் முட்டி, மோதி, தட்டு, தடுமாறி திசை தெரியாது தவித்து நின்ற மிகச் சாதாரண ஒரு மனிதனுக்கு 'தமிழன்' என்று தமிழ் இனத்தையே பிரதிநிதிக்கும் அளவிற்கு பொதுவான ஒரு முகவரியை கொடுத்தது ஆங்கிலேயர் இந்தியாவிற்கு கொண்டு வந்த ஜனநாயக சம உறிமை எனும் சமூக அம்சம் தான்.
அதற்கு முன்பு, அரசாட்ச்சி முறையின் கீழ் ஒரு குறிப்பிட்ட சிறு வட்டத்திற்குள்ளே எதைப் பற்றியும் எநத விவரமும் தெரியாது வலம் வந்து, திக்கும் தெரியாது, திசையும் தெரியாது நின்ற ஒரு மிகச் சாதாரண சாமான்யனை, ஆங்கிலேயர் உட்கொணர்ந்த அரசியல் ஆட்ச்சி முறை 'ஒரு மனிதனுக்கு ஒரு ஓட்டு' என்கிற சாதனத்தின் மூலம் கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு சென்று வைத்து விட்டது.
இவனும் ஏதோ காலங்காலமாக தமிழுக்காகவும், தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்காகவும் உழைத்தவன் போல பாவனை செய்ய ஆரம்பித்து விட்டான். எண்ணிக்கையில் அதிகம் உள்ளான் என்கிற காரணத்தினால், இந்த கோஷ்டியில் நன்றாக தமிழ் பேச, எழுத தெரிந்தவர்கள் தமிழ் தலைவர்கள் ஆகி விட்டார்கள்.
பிறகு தமிழை மூலதனமாக வைத்து அரசியலில் இறங்கிய இவர்களுக்கு, பிற மொழி எதுவும் மக்களிடம் வந்தடையாது பார்த்து கொள்ள வேண்டியது முக்கிய அரசியல் சூட்ச்சமம் ஆனது. அப்படியே 'நாங்கள் தான் இருப்பதிலேயே பெரிய தமிழ் பருப்புக்கள்' என்று தொடர்ந்து விட்டார்கள்.
இந்த நிலைப் பாடு தமிழகத்திற்கு தான் வெகுவாக பொருந்தும் என்றாலும், பரவலான மேலோட்ட நிலையில் பார்க்கும் போது, இங்கு மலேசியாவிலும் நமது நிலை ஏறக்குறைய அப்படி தான்.
இன்றும் 'தமிழன், தமிழன்' என்று எல்லா இன சூழல்களிலும் கதவை பிற யாரும் நுழைய முடியாமல் அடைத்து விடுகிறோமே எதனால் என்று நினைக்கிறீர்கள்? காலங்காலமாக கேட்பாரற்று கிடந்த நம்மிடம் தீடிர் என்று 'இன அளவிலான பதவி பலம்' என்று ஒரு சிறு துருப்பு சீட்டு கிடைத்து விட்டது. அதன் பிடியை நாம் சற்று தளர்த்தினாலும், திறமை மிக்க பிற இந்திய இனத்தவர்கள் எங்கு அதை பிடிங்கி கொண்டு போய்விடுவார்களோ என்கிற பயம் தான் காரணம்.
இது தான் 'தமிழ் பருப்புக்கள்' என்று கூறிக்கொண்டு, நடைமுறை வாழ்க்கையில் எல்லா பரிநாமங்களிலும் பிறரிடம் தோற்று வரும் இன்றைய தமிழனின் உண்மையான பின்னனி.
( குறிப்பு: நான் பிரமாண அல்லது நாட்டு கோட்டை செட்டியார் இனங்களுல் ஒன்றை சார்ந்தவன் அல்ல. நானும் இங்கு தட்டு, தடுமாறி 'பே...' என்று திசை தெரியாது நிற்க்கும் கேனக் கிருக்கர்களில் ஒருவன் தான் ).
சரி இந்த மாஙகாய் மடையர் கோஸ்டியிடம் 'தூரநோக்கு சிந்தனையை' பற்றி என்ன பேசுவது. நாம் பேசுவது இங்கு பொருந்துமா? பொருந்த வேண்டும் !! மலேசிய தமிழன் என்பவன் உருப்பட வேண்டும் என்றால் நாம் தொலைகாட்சியில் சீரியல் பார்ப்பதை சிறிது குறைத்து கொண்டு, அடுத்த தலைமுறை சீராக வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அன்றாடம் சிறிது நேரமாவது தூரநோக்கோடு யோசிக்க வேண்டும். பிறகு அப்படி யோசித்து கிடைத்த பதில்கள் ஸ்தரம்பெற அவற்றுக்கு தேவையான முயற்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.
இதை விளாவாரியாக இங்கு பேசி பிரயோஷணம் இல்லை. விளாவாரியான விவாதங்களில் பங்கு பெருவதற்கு தேவையான 'மசாலா' எல்லாம் நம் மக்களிடம் கிடையாது. பேசாமல் என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு பெரியவரிடம் நான் படித்த பாடத்தை உதாரணமாக சொல்லி விட்டுச் செல்கிறேன். சிந்திக்க தெரிந்தால், சிந்திக்க முடிந்தால், சிந்தித்து பயன் பெறப் பாருங்கள்.
செட்டியாரிடம் படித்த பாடம்
தமிழ்நாட்டிலிருந்து , பத்தொன்பதாம் நுற்றாண்டிலேயே இந்த நாட்டிற்கு வணிகர்களாக வந்து சீனர்களையும் மிஞ்சி அபாரமாக பணம் சம்பாதித்த இனம் 'நாட்டுக் கோட்டை செட்டியார்கள்' இனம் ( நகரத்தார் என்றும் இவர்கள் அழைக்கப் படுவர் ).
2000 வருடங்களுக்கு முன்பே ஒரு பெரும் வாணிப துரைமுகமாக பெயர் பெற்ற காவிரிப்பூம் பட்டிணம் (அள்ளது பூம்புகார்) எனும் நகரத்தை தங்கள் இன மையமாக கொண்டு வாணிபம், வர்த்தகம் என்று வாழ்ந்து வந்த இந்த இனத்தை சார்ந்தவர்கள் தான் சிலப்பதிகாரத்தில் வரும் கோவலனும், கண்ணகியும். அதே போல் 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார், இயற்கை நாயனார் ஆகிய இருவரும் இந்த இனத்தை சார்ந்தவர்கள் தான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்தியில் தொடங்கி இவர்கள் மலாயா, சிங்கப்பூர், பர்மா, சிலோன், ஜாவா, சுமாத்திரா, வியட்நாம் என்று தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றுக்கு சென்று தொழில் புரிந்து அந்த நாளய வங்கியர்களாக விளங்கினார்கள். அபரிதமான தனமும் ஈட்டினர். அப்படி ஈட்டிய தனத்தின் ஒரு பகுதியை ஒவ்வொரு வருடமும் 'மகமை' என்கிற பெயரில் ஒதுக்கி வைத்து அதிலிருந்து பல பொதுச் சேவைகளையும், அறப் பணிகளையும் செய்தனர்.
இப்படி அவர்கள் மேற்கொண்ட பணிகளில் தெய்வத் தொண்டும் ஒன்று. மலேசியாவில் மட்டும் இந்த இனத்தினர் தம் சொந்த செலவில் கட்டிய 15 தெண்டாயுதபாணி கோவில்கள் உள்ளன. அதே போல் சிங்கப்பூரில் 2 கோவில்களும், பர்மாவில் 50 கோவில்களும், வியட்நாமில் 2 கோவில்களும், சிலோனில் 4 கோவில்களும் உள்ளன.
அதுபோக வாணிபம், வர்த்தகம் என்று பார்த்தால் இவர்கள் ஆரம்பித்தவை தான் இந்தியாவில் உள்ள இந்தியன் பேங், இந்தியன் ஓவர்சிஸ் பேங், பேங் ஆவ் மதுரா ஆகியவை. மேலும் சினிமா துரையில் இவர்களுடைய ஈடுபாடு தமிழ் சினிமா ஆரம்பித்த கால முதல் இருந்து வந்துள்ளது. ஏ.வி.எம். ஸ்டுடியோ, நியூடோன் ஸ்டுடியோ, சாரதா ஸ்டுடியோ, ஸ்யாமளா ஸ்டுடியோ யாவும் நாட்டுகோட்டை செட்டியார்களுடையவை தான்.
அதே போல் தமிழகத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவை இவர்கள் தோற்றுவித்தவை தான். இவை எல்லாம் போக செட்டிநாட் சிமெண்ட், மட்ராஸ் சிமெண்ட், தியாகராஜா குருப் ஆவ் கம்பனீஸ், முருகப்பா குருப் ஆவ் கம்பனீஸ், டிரிவாங்கூர் ரெயான்ஸ், சிவகாமி மில்ஸ், அங்கிலோ பிரென்ஞ் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் இன்னும் பல்லாண்டுகளாக திறம்பட நடத்தப் பட்டு வரும் நூற்றுக் கணக்கான தொழில் ஸ்தாபனங்கள் இவர்கள் தோற்றுவித்து நடத்தபட்டு வருபவை தான்.
இப்படி வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் 'திறமைசாலிகள்' என்று முத்திரை பதித்த இந்த இனத்தின் உலக அளவிளான மொத்த ஜனத்தொகை என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? தென் கிழக்கு ஆசியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என்று உலகின் பல பகுதிகளில் குடிபுகுந்து அட்டகாசமாக வெற்றிநடை போட்டு வரும் இந்த இனத்தின் மொத்த ஜனத்தொகை வெறும் 200,000 பேர்களுக்கு குறைவானதுதான். ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆனாலும் அதுதான் உண்மை.
ஒரு 50 - 60 வருடங்களுக்கு முன்பு வரை, இந்த இனத்தவரை நாம் மலாயாவின் எல்லா பிரதான நகரங்களிலும் லேவாதேவி தொழில் (வட்டி கடை) புரியும் சிறு தொழில் அதிபர்களாக பார்க்க முடிந்தது. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் 1969 ஆம் ஆண்டு இனக் கலவரத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக இந்த நாட்டின் தொடர்பை முழுமையாக அறுத்துக் கொண்டு இந்தியா திரும்பி விட்டனர். இப்போது நாட்டு கோட்டை செட்டியார்கள் இனத்தில் மிஞ்சி போனால் மலேசியா முழுவதும் ஒரு 800 பேர் தான் இருப்பார்கள்.
இப்படி மலேசிய தொடர்புகளை முழுமையாக அறுத்துக் கொண்டு சில நாட்களில் தாயகம் திரும்ப இருந்த ஒரு முதிய செட்டியாரிடம் எனக்கு 20 வயது இருக்கும்போது நானும் என் உறவினர் ஒருவரும் "ஏன் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறீர்கள்?", என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அன்று எனக்கு சரிவர புரியவில்லை. ஆனால் 37 வருடங்கள் கழித்து இன்று நினைத்துப் பார்க்கையில் அது ஒரு மாமனிதர் சொன்ன தேவ வாக்காக தோன்றுகிறது.
"தம்பீ, முதலெ நாம எதுக்கு நாடு விட்டு நாடு வந்தொம் என்கிற மூல காரணத்தை மனதிலெ ஏத்திக்கனும். 70 வருஷங்களுக்கு முன்னாலெ எங்க தாத்தா இந்த நாட்டுக்கு வந்தப்ப இங்க பணம் சம்பாதிக்க நெறைய வாய்ப்பு இருந்திச்சு. மலாய்காரங்கலெல்லாம் நல்ல மனுஷங்களா இருந்தாங்க. நாமளும் நெரைய சம்பாதித்தோம். ஆனா இப்ப எல்லாமே மாறிப் போச்சு தம்பீ. இனிமே இந்த நாட்டை நம்பி, நாம பொலப்பு நடத்தவும் முடியாது, குடும்பங்குட்டியோட இங்க வாழவும் முடியாது.
இவனுங்க இப்பச் சொல்றானுங்களே 20 வருஷத்துக்கு மட்டும் எங்களுக்கு 'முதற்சலுகை' கொடுத்தா போதும், அதுக்கு அப்புறம் அது எங்களுக்கு வேண்டாம்ன்னு. அதை நீ நம்புறே ? அதெல்லாம் புருடா. நடக்காதுப்பா. இவனுங்க இனிமெ ஜன்மத்துக்கும் இவனுங்களோட சலுகைய விட்டுக் கொடுக்க மாட்டானுங்க.
இந்தியாவிற்கு திரும்ப போவதற்கு வழி இல்லாதவர்கள் கதை வேற. ஆனா, திரும்ப போவதற்கு வழி இருந்தும், இந்தியாவை சுத்தமா மறந்துட்டு இந்த நாட்டிலேயே செட்டில் ஆகனுன்னு நெனைக்கும் தமிழவுங்களுக்கு நாம செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது இப்பத் தெரியாது. ஒரு இருவது முப்பது வருசம் போனதுக்கு அப்புறம்தான் தோணும், அடடா தப்பு பண்ணிட்டமேன்னு.
இந்தியாவுக்கு என்னப்பா கொறச்ச? நூறு வருஷத்துக்கு முன்னாலெயே நாம மலாயா, சிங்கப்பூர், பர்மான்னு இத்தனை நாடுகளுக்கும் கொண்டிவிக்க வந்து பணம் சம்பாதிச்சம்ன்னா, அதுக்கான கெட்டிகாரத்தனத்தையும், பக்குவத்தையும், வித்தையையும் எங்கேருந்து கத்துகிட்டோம் ? இந்தியாவில இருந்துதானே. நமக்கு தான் தொழில் செய்யிறது எப்படின்னு தெரியுமே! நம்ம ஊருக்குபோய் எதாவது தொழில் ஆரம்பிச்சா முதல்ல கொஞ்சம் கஷ்டமா தெரியும். அப்புறம் எல்லாம் சரியா வந்திரும்.
தம்பீ....நீ உன்னெ மட்டும் வச்சு பார்த்தேன்னா அஞ்சு, பத்து வருஷ காலம்லாம் ரொம்ப நாளாட்டம் தெரியும். ஆனா பாரம்பரியம், குடும்பம், குட்டின்னு நெனைக்க ஆரம்பிச்சிட்டேன்னா அப்புறம் இந்த நாட்டுல இருக்கிறதா, இந்தியா திரும்புறதான்னு நீ போடுற கணக்கு முப்பது வருஷத்திலே இருந்து அம்பது வருஷ கணக்கா இருக்கணும். ஒன்னுடைய பேரன் பேத்தி வரைக்கும் கணக்குப் போட்டு பாக்கனும். நீ மட்டும் நல்லா வாழ்ந்துட்டு, ஒன் புள்ளை, பேரன்கல்லாம் அவனுங்க காலத்திலே இந்த நாட்டுல உருப்படாமப் போயிட்டான்கள்னா, நீ வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமில்லாமல் போயிரும்" என்று சொல்லி முடித்தார்.
இதை படிக்கும் வாசகர்கள் இங்கு கூறப் படுவதை முறையாக புரிந்து கொள்ள வேண்டும். செட்டியார் சொன்ன படி இங்குள்ள எல்லா தமிழர்களும் இந்தியா திரும்பி இருக்க வேண்டும் என்று நான் கூறுவதாக நினைத்து விடாதீர்கள்.
நான் இங்கு சுட்டி காட்ட விழைவது, அந்த பெரிய மனிதரின் தீட்ச்சயமான சிந்தனையையும், துல்லிதமாக எடை போடக் கூடிய தூரநோக்கு பார்வையையும் தான். அத்தோடு கடைசியாக அவர் கூறிச் சென்றாரே "நீ மட்டும் நல்லா வாழ்ந்துட்டு, ஒன் புள்ளை, பேரன்கல்லாம் அவனுங்க காலத்திலே இந்த நாட்டுல உருப்படாமப் போயிட்டான்கள்னா, நீ வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமில்லாமல் போயிரும்" என்று, அந்த வாசகத்தில் தான் எவ்வளவு பெரிய உண்மை தேங்கி நிற்கின்றது.
என் வாழ்க்கையில் நான் எதிர் கொண்ட எத்தனையோ நிகழ்வுகளில் இந்த செட்டியாரிடம் நான் கற்ற பாடம் மிக மேலான ஒன்று என்பது என் நிலைப்பாடு.
9 comments:
அருமையான விளக்கம்.அற்புதமான படைப்பு.தமிழர்களின் குறைப்பாடுகளை களையும் வழிமுறைகள் என்ன என்பதை கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.பரம்பரை பரம்பரையாக சிறப்பாக வாழ்ந்தவர்கள் சீறீய சிந்தனையாளர்கள் என்பது மறுக்க படவேண்டிய பேச்சு.தார்மீக சிந்தனை திறனில் மாற்றமும்,வெற்றிக்காக போராடும் குணமும் கொண்டவர்கள் எந்த வர்கமாக இருந்தாலும் சிறப்புர வாழவும் வளரவும் முடியும்..வெற்றித் தோல்விக்கு வர்க சாயம் ஏற்றுக்கொள்ள முடியாது ஐயா. முற்காலத்தில் அடிமை சாயலில் இருந்தவர்கள் வெற்றி தோல்வியை நிர்ணைக்கமுடியாதவர்கள் என்று எண்ணுவது மடமை.சமுதாய கட்டமைப்பு மாற்றம் பெற வேண்டிய தருணம்.அதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள் ஐயா.உங்களின் ஆழமான, அழுத்தமான படைப்புக்கு நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
வாருங்கள் மனோகரன் கிருஸ்ணன்,
உணர்ச்சியால் சுண்டிவிடப் பட்ட ஒரு பின்னூட்டத்தை வெகு நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். எங்கு இங்கு நம் இனத்தவர் எல்லோரும், எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு இருக்கிறார்களோ என்று சில காலமாக எனக்கு இருந்த வந்த சந்தேகம் இன்று தீர்ந்தது. இல்லை, எங்களில் சிலராவது விழித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று காட்டிய தங்களுக்கு என் நன்றி !
எது "தமிழர்களின் குறைபாடுகளை களையும் வழிமுறைகளா?", சற்றுமுன் பந்திங் நகரில் வசிக்கும் ஒரு தமிழரை நான் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. இதற்கு முன்பு நான் அவரை பார்த்தது கிடையாது. இரு தமிழர்கள் ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், அவர் வசிக்கும் ஊரில் உள்ள தமிழர்களின் நிலையை விசாரித்தேன். அவர் கூறிய சில விஷயங்கள் என்னை அதிர்ச்சியுற வைத்தன.
அவர் சொல்கிறார் பந்திங் நகரில் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் நம் இன பிள்ளைகளில் மூன்றில் ஒரூவருக்கு புத்தகத்தில் உள்ளதை எழுத்து கூட்டி படிக்கவே தெரியாது என்று. என்னது..... ?? !!
இது உண்மையென்றால், நேற்று வரை நான் நம் இனத்தின் பிரச்சனைகள் என்று கருதி வந்த எண்ணம், கணக்கு எல்லாம் தப்பாகி விட்டது என்று பொருள். நான் கடல் அளவு என்று நினைத்தது சமுத்திரம் அளவு இருக்கும் போல் தெரிகிறது.
அய்யா, நம் இனத்தை போல் ஒரு இனத்தின் பிரச்சனையை உடனே பட்டியல் இட்டு, அதற்கு இது இது தான் நிவாரணம் என்று யாராவது உடனே காட்ட முடியும் என்று சொன்னால் அவர் உலக மகா 'வ்ராடு' ஆவார்.
நம் இனத்தின் பிரச்சனைகள் என்ன, அவற்றிக்கான நிவாரணங்கள் யாவன என்கிற கேள்விக்கான பதில்களை ஒரு ஸ்தாபனம் அல்லது அரசாங்கம் பல கால ஆய்வுக்கு பிறகு, பல கால சமூகவியல் ஆராய்ச்சிக்கு பிறகு தான் கண்டறிய முடியும். இதை தான் 'ஹிந்திராவ்' காரர்கள் செய்திருக்க வேண்டும், செய்திருக்க முடியும் என்று நான் இதற்கு முன்பு பல் முறை கூறியிருக்கிறேன்.
நான் வசிக்கும் பகுதியில் ஒரு காலேஜ் உள்ளது. அதில் உகாண்டாவில் இருந்து வந்த ஒரு விரிவுரையாளர் வேலை செய்து வருகிறார். ஒரு மலாய் நண்பரின் மூலமாக இவர் எனக்கு பரிட்ச்சயமானார். அந்த விரிவுரையாளர் என்னிடம் தன் இனத்தின், தன் நாட்டின் சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பற்றி பேசும் போது. தங்களை போல்தான் பேசுவார்.
ஆனால், "எத்தனை வருடங்களாக நீங்கள் உகாண்டாவை விட்டு வெளி நாடுகளில் இருக்கிறீர்கள்" என்ற நான் கேட்ட கேள்விக்கு "15 வருடங்கள்" என்று சொன்னார்.
நாம் யாவருக்குமே 'நான், எனது குடும்பம்" என்கிற ஒரு நிலைப்பாடு ஒன்று உள்ளது. அதை தாண்டி "எனது இனம், எனது சமூகம்" என்கிற பிறிதொரு நிலைப்பாடு உள்ளது. அதையும் தாண்டி செல்லும்போது "என் நாடு" என்கிற மற்றுமொரு நிலைப்பாடு வருகிறது.
இதில் அதிமுக்கியமானதாக நான் நினைப்பது "நான், எனது குடும்பம்" என்கிற வட்டத்தை தான். அந்த என் தனிப்பட்ட வட்டத்தை ஸ்தெரப்படுத்துவதை தான் என் வாழ்க்கையின் முதற் குறிக்கோளாய் நான் கொண்டுள்ளேன்.
அந்த நிலையில் இருந்து பார்க்கும்போது என் கண்ணுக்கு வெற்றிகரமாக சிலர் நானும், என் குடும்பமும் நடக்க வேண்டிய பாதையில் இதற்கு முன் நடந்து சென்றிருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் எப்படி இந்த பாதையில் நடந்து சென்றார்கள் என்று நான் என் முலையை கசக்கியபோது எனக்கு கிடைத்த சில விடைகள் தான் நான் எழுதியுள்ள இந்த பதிவுக்கான ஆதாரம். நான் எழுதியுள்ளவை தங்களுக்கு சரியென்று படுகின்றனவோ, இல்லையோ எனக்கு சரி என்றே படுகின்றன.
வாழ்க வளமுடன்,
வணக்கமும் வாழ்த்துகளும் உரிதாகட்டும்.
உணச்சிமிகுந்த கருத்தாக இருக்கலாம், ஆனால் உணர்ச்சியில் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட கருத்து அல்லா ஐயா அது, உண்மை உணர்வுகள் உணர்ச்சிமிக்கதாக இருக்கும், மறுக்க முடியாது, நான் உனர்ச்சி வயப்படுவன் இல்லை, ஆத்திரத்தால் அறிவிழந்து ஆவேசமாக பேசும் குணம் இல்லை ஐயா.. எனது உள்ளக்கிடங்கை முக உணர்வுகளுக்குள் வைத்துவிட்டு மற்றவர்களை படிக்க விடுபவன் அல்லா ஐயா.
நீங்கள் ஒரு நல்ல சிந்தனையாளார் என்பதை நான் அறிவேன்.உங்களின் எழுத்தும், கருத்தும் தங்கள் ஒரு கடும் சமுதாய பற்றாளர் என்பதை பறைச்சாற்றுகின்றன,உங்களின் கருத்தை மறுக்கவோ மறைக்கவோ நான் முன் வரவில்லை. உண்மையான கருத்தை சொல்லும் பொழுது மறுபதற்கு அங்கு இடம் ஏது?
எனது கேள்வி ? சமுதாய பலவீனங்களை களையா ஒரு ஒழுங்கு முறை திட்டம் ஏது உண்டா? அறிவிற்ச்சிறந்தோர் ஆயிரம் தமிழர்கள் உண்டு. ஏன் திட்டங்களை வகுக்க முடியாது? கேள்வி என்றால் பதில் ஒன்று இருக்க வேண்டும், பொய் என்று இருந்தால் உண்மை என்று இருக்க வேண்டும். பலவீனங்களை அடுக்கி கொண்டிருக்கும் நீங்கள் பலவீனங்களை பலமாய் மாற்றும் வித்தையும் சொல்லிதான் ஆகவேண்டும் ஐயா. இது எனது தாழ்மையான வேண்டுக்கோள்.
நல்ல சிந்தனையாளாரான நீங்கள் இதையும் சிந்தித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
நம் சமுகம் மேன்மை அடையும் என்று நான் நம்புகின்றேன், உலக சேவ சங்கத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீகளா? எளியமுறை குண்டலியின் யோகத்தின் வழி இந்த சமுதாயதின் பாரிய மாற்றங்கள் எற்ப்படுத்தி இருக்கிறார் யோகி வேதத்திரி மகரிசி. தமிழர்களுக்கு தேவையான இனிய இல்லற முறையை வாழ்ந்து காட்டிய மகான். அவரின் கருத்துக்களை படித்து பாருங்கள் ஐயா. மாற்றங்கள் எங்கிருந்து தொடங்கவேண்டும் என்று நீங்கள் அறிவீகள்.
தங்களின் கருத்தை மறுத்து மாசுப்படுத்துகின்றேன் என்று எண்ண வேண்டாம்..உங்களின் எண்ணங்களையும் உங்களின் வருத்தத்தையும் புரிந்த்திருக்கின்றேன் .தொடந்து எழுதுங்கள் ஐயா. காலத்தை வெல்லும் உங்கள் கருத்து
வாழ்க வளமுடன்.
வாருங்கள் மனோகரன் கிருஸ்ணன்,
சரி. தாங்கள் கேட்கும் கேள்வி நியாயமானது தான். தங்களின் கேள்விக்கு என் பதில்:-
தங்கள் பின்னூட்டத்தில் //"நம் சமுகம் மேன்மை அடையும் என்று நான் நம்புகின்றேன்"// என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். "மேன்மை அடைவது" என்றால் அதன் பொருள் என்ன?
ஒரு 30 வருடங்கள் கழித்து "மேன்மை அடைந்துள்ளோம்" என்று நாம் நம்மை பற்றி கூறிக்கொண்டால், அடுத்து "யாரோடு ஒப்பிடுகையில் மேன்மை அடைந்திருக்கிறீர்கள்?" என்கிற கேள்வி ஒன்று எழும்பும் அல்லவா?
அந்த கேள்விக்கு முறையான, அறிவு பூர்வமான ஒரு பதிலை கொடுக்க முடிந்தால் தான் உங்களின் "நாங்கள் மேன்மை அடைந்துள்ளோம்" என்கிற கூற்று உண்மையாகும். இல்லையேல், தங்கள் கூற்றும் நம் இனத்தவர் அடிக்கடி அர்ந்தமில்லாமல் கூறிக் கொள்ளும், மலாய் மொழியில் 'syiok sendiri' என்று சொல்லப் படும் வெத்து பீலாக்களுக்கு ஒப்பாகி விடும்.
உதாரணத்திற்கு, 2009 ஆம் ஆண்டு மலாய் இனத்தவரின் இன மேம்பாடு 40 விழுக்காட்டாகவும், சீனர்களின் மேம்பாடு 50 விடுக்காட்டாகவும் இருக்கும்போது, இந்தியர்களின் மேம்பாடு 20 விழுக்காட்டாக இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள்.
முப்பது வருடங்கள் கழித்து, 2039 வருடத்தில் மற்ற இரு இனங்களும் 25 விழுக்காடு கூடுதல் முன்னேற்றம் கண்டு மலாய்காரர்கள் 50 விடுக்காடாகவும், சீனர்கள் 75 விழுக்காடாகவும் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அந்த நிலையில் உங்கள் இனம் விகிதாச்சாரப் படி 25 விழுக்காடாவது மேம்பட்டு இருக்க வேண்டும். அந்த நிலையை உங்கள் இனத்தால் எட்டி பிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் அடைந்தது முன்னேற்றம் அல்ல, இன பின்னடைவு.
அடுத்த முப்பது வருடங்களுக்குள் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்களூக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றால் இது 'சாத்தியம் தான்' என்று நீங்கள் நம்புகிறீர்கள். 'சாத்தியம் இல்லை' என்று நான் நம்புகிறேன்.
அதனால் தான், என் 16 பாக தொடரில் ஒரு 30 முறையாவது 'இந்த நாட்டில் பத்தில் இரண்டு தமிழர்கள் தான் மற்ற இனங்களுக்கு ஈடு கொடுத்து இந்த நாட்டில் முன்னேற்றம் அடைய முடியும்' என்று கூறி வந்துள்ளேன்.
இதற்கு ஒரு ஆதாரத்தை கொடுக்கவா? சரி, வாருங்கள்.
மலேசிய பொதுப் பல்கலைக்கழகங்களில் ஒரு காலத்தில் இந்தியர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு இருந்தது. பிறகு அது சன்னம், சன்னமாக வெவ்வேறு காரணங்களுக்காக குறைந்து சென்ற சில வருடங்களுக்கு முன்பு 4 - 5 விழுக்காடாக குறைந்தது. ஆனால் இன்று இந்திய மாணாக்கர்களுக்கு ஒதுக்கப் படும் இடம் மிஞ்சிப் போனால் ஒரு 2 விழுக்காடு தான் இருக்கும். அதில் பாதி தமிழர்கள் அல்லாத பிற இந்திய இனத்தினராக இருப்பார்கள்.
ஆக, இதன் அர்த்தம் என்ன? பொது பல்கலைக்கழகங்களில் 1000 பிள்ளைகள் படித்தால், அதில் தமிழ் பிள்ளைகள் பத்துபேர் தான் இருக்கிறார்கள் என்று பொருள்.
அது எப்படி என்று கேட்கிறீர்களா? அரசாங்கம் வெளியிடும் பொதுப் பல்கலைக்கழக விகிதாச்சர இட ஒதுக்கீட்டு கணக்கில் மலாய்க்காரர்களுக்கு மட்டும் என்று பிரத்தியேகமாக நடத்தப் படும் யுனிவர்சிட்டி மாரா சேர்த்து கொள்ளப் படுவதில்லை, யுனிவர்சிட்டி இஸ்லாம் சேர்த்து கொள்ளப் படுவதில்லை, யுனிவர்சிட்டி சையின்ஸ் இஸ்லாம் மலேசியா சேர்த்து கொள்ளப் படுவதில்லை, இதே போல் இன்னும் சில பொது பல்கலைக்கழக பட்டம் வழங்கும் கல்வி துறைகள் சேர்த்து கொள்ள படுவதில்லை.
நாம் இந்த கல்வி நிலையங்களுல் அனுமதிக்க படும் மலாய்கார மாணாக்கர் எண்ணிக்கைகளையும் கணக்கில் எடுத்து கொண்டு, அதன் பிறகு மலேசிய இந்தியர்களின் பல்கலைக்கழக நுழைவு விகிதாச்சாரம் என்ன என்பதை கணக்கெடுத்தால் தான் உண்மையான நிலைமை புரியும்.
சீனர்கள் நிலையும் நம்மை ஒத்ததுதான். ஆனால் என்ன, உண்மை என்ன என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு, அந்த நிலையையும் தாண்டி தம் இனத்தை மேம்படுத்துவதற்கான வேலைகளை சூட்ச்சமமாக முடிக்கிவிட்டு வாழ்வில் எல்லா பரிநாமங்களிலும் சீனர்கள் அட்டகாசமாக வெற்றி கண்டு விடுவார்கள். ஆனால், நம் நிலை அப்படியா?
சமூகத்தை பற்றி ஆய்.. ஊய் என்று இங்கு வீர வசனம் பேசும் நம் இன எழுத்தாளர்களாலும், சிந்தனையாளர்களாலும், பேச்சாளர்களாலும் என்ன செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்கள்? ஒரு டுபுக்கும் செய்ய முடியாது.
அதற்கு ஒரு முக்கிய காரணம், நாம் நம்மை விட திறமைசாலிகளான மலையாளிகள், யாழ்பாணத்தார்கள், சீக்கியர்கள், வட இந்தியர்கள், செட்டியார்கள் யாரையும் முக்கிய பதவி நிலையை அண்ட விடுவது கிடையாது. ஏதோ பேருக்காக அவர்களுக்கு முன்னுறிமை கொடுப்போமே அல்லாமல், அவர்களுக்கு உண்மையான அங்கீகாரம் எல்லாம் நாம் கொடுப்பது கிடையாது. ஏன்? பயம். எங்கு அவர்களை பதவிகளின் கிட்டே விட்டால் எல்லாவற்றையும் நம்மிடம் இருந்து பிடுங்கி கொண்டு போய் விடுவார்களோ என்கிற பயம்.
ஏன்..ய்ய்...யா !!!!
௧௮. ௧௧. ௨௦௦௯ . வாழ்த்துக்கள் சாமான்யரே ,
தலைப்புகள் புதியதாக பிரசுரமாகி இருப்பது கண்டு படிக்க வந்தேன். கருத்துக்கள் நன்று .
சாமான்யரே
படைப்பில் கடுமை காணப்படுவது கட்டுரைக்கு சிறப்பு சேர்க்கிறது . ஆனால் பின்னூட்டம் வழங்குபவரிடம் கடுமையை தவிர்க்க வேண்டும் . படிக்கும் போது அப்படி ஒரு கடுமையை உணர முடிகிறது. ..
வாருங்கள் சிவகங்கையாரே,
எங்கு கோபித்து கொண்டு வராமல் இருக்கிறீர்களோ என்று எனக்குள் ஒரு ஐய்யப்பாடு இருந்தது. தாங்கள் வந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.
நான் கடுமையான விமர்சனன் தான். ஆனால், பிற மனிதர்களின் நிறை, குறைகளை தெளிவாக கண்டறியக் கூடுபவனும் கூட. தாங்கள் சில மேம்பட்ட குணங்களை உடையவர் என்பது என் எண்ணம். தங்களைப் போல் ஒருவர் எனது ஊடகத்திற்கு அடிக்கடி வந்து பின்னூட்டம் விட்டுச் செல்வதை நான் பெருமையாகவே நினைக்கிறேன்.
திடீறென்று தாங்கள் இங்கு வருவதை நிறுத்திக் கொண்டதும், "அடடா ரொம்ப ஓவரா கமண்டு அடித்து விட்டோமோ?" என்று என் மேலேயே எனக்கு சிறிது வருத்தமும் இருந்தது.
//ஆனால் பின்னூட்டம் வழங்குபவரிடம் கடுமையை தவிர்க்க வேண்டும் . படிக்கும் போது அப்படி ஒரு கடுமையை உணர முடிகிறது. ..// .... அய்யய்ய, நான் கடுமையை காட்ட வேண்டும் என்று நினைத்து எதையும் கூறவில்லை. அதுவும் மனோகரன் கிருஷ்ணன் போன்ற ஆழ்ந்த சமுதாய உணர்வு கொண்ட, மித வாத இயல்புடைய, நல்ல மனிதரிடமா !! ச்சே, ச்சே .
சிவகங்கையாரே, இந்த ஊடகத்தின் முகப்பிலே நான் குறிப்பிட்டுள்ளது போல் எனக்கென்று ஒரு தனி பாணி உள்ளது. எதைச் சொன்னாலும் 'நெத்தியில் அடித்தாற் போல் சொல்ல வேண்டும்' என்று நினைப்பவன். அதே பாணியில் அடுத்தவரும் என்னை அனுக வேண்டும் என்று நினைப்பவன். அதனால், நான் மிக சாதாரணமாக நினைத்து கூறும் விஷயங்கள் கூட பிறர் மனதை அவ்வப்போது காயப் படுத்தி விடுகின்றன என்று நினைக்கிறேன்.
ஆனால் பாருங்கள் என் போன்று ஏட்டிக்கு போட்டியாக சிந்தனை செய்யும் இயல்புடையோர், எப்பவும் சிறிது அதிரடியான பேர்வளிகளாக தான் இருப்பார்கள்.
நானும் எல்லோரைப் போலவும் பூசி முழுகினால் போல் எழுதினேன் என்றால், என் எழுத்து ஆழமில்லாததாகி, கடைசியில் அர்த்தமில்லாத ஒன்றாகவும் ஆகி விடும்.
உண்மையை சொல்லும் போது எதற்கு நாம் தலைவணங்க வேண்டும். நீங்கள் சொல்லும் ஒவ்வோரு வார்த்தையும் உண்மைதான்.உங்களின் பின்னோட்டம் பதில்கள் கண்டு வருத்தம் கொள்வதற்கு எதுவும் இல்லை ஐயா.இந்த சமுதாயத்திற்கு தேவை உறுதியான கருத்துக்கள்.உங்கள் பணி சிறக்கட்டும் ஐயா.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாருங்கள் மனோகரன் கிருஷ்ணன்,
தங்களைப் போல் ஆழ்ந்த சமுதாய உணர்வு கொண்ட ஒருவர் 'சமுதாயத்திற்கு தேவை உறுதியான கருத்துக்கள்" என்று கூறுவதை கேட்க்கும் போது மனதிற்கு சிறிது இதமாக இருக்கிறது.
நான் சொல்லும் கருத்துக்களை 'கடினமானவை, கசப்பானவை' என்று நினைத்து ஆத்திரப் படும் வாசகர்கள் மத்தியில், அவற்றை 'உறுதியானவை, தேவையானவை' என்று கூறி பின்னூட்டம் வழி ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது நன்றி.
வாருங்கள் சிவகங்கையாரே,
எங்கு கோபித்து கொண்டு வராமல் இருக்கிறீர்களோ என்று எனக்குள் ஒரு ஐய்யப்பாடு இருந்தது. தாங்கள் வந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.
நான் கடுமையான விமர்சனன் தான். ஆனால், பிற மனிதர்களின் நிறை, குறைகளை தெளிவாக கண்டறியக் கூடுபவனும் கூட. தாங்கள் சில மேம்பட்ட குணங்களை உடையவர் என்பது என் எண்ணம். தங்களைப் போல் ஒருவர் எனது ஊடகத்திற்கு அடிக்கடி வந்து பின்னூட்டம் விட்டுச் செல்வதை நான் பெருமையாகவே நினைக்கிறேன்.
திடீறென்று தாங்கள் இங்கு வருவதை நிறுத்திக் கொண்டதும், "அடடா ரொம்ப ஓவரா கமண்டு அடித்து விட்டோமோ?" என்று என் மேலேயே எனக்கு சிறிது வருத்தமும் இருந்தது.
//ஆனால் பின்னூட்டம் வழங்குபவரிடம் கடுமையை தவிர்க்க வேண்டும் . படிக்கும் போது அப்படி ஒரு கடுமையை உணர முடிகிறது. ..// .... அய்யய்ய, நான் கடுமையை காட்ட வேண்டும் என்று நினைத்து எதையும் கூறவில்லை. அதுவும் மனோகரன் கிருஷ்ணன் போன்ற ஆழ்ந்த சமுதாய உணர்வு கொண்ட, மித வாத இயல்புடைய, நல்ல மனிதரிடமா !! ச்சே, ச்சே .
சிவகங்கையாரே, இந்த ஊடகத்தின் முகப்பிலே நான் குறிப்பிட்டுள்ளது போல் எனக்கென்று ஒரு தனி பாணி உள்ளது. எதைச் சொன்னாலும் 'நெத்தியில் அடித்தாற் போல் சொல்ல வேண்டும்' என்று நினைப்பவன். அதே பாணியில் அடுத்தவரும் என்னை அனுக வேண்டும் என்று நினைப்பவன். அதனால், நான் மிக சாதாரணமாக நினைத்து கூறும் விஷயங்கள் கூட பிறர் மனதை அவ்வப்போது காயப் படுத்தி விடுகின்றன என்று நினைக்கிறேன்.
ஆனால் பாருங்கள் என் போன்று ஏட்டிக்கு போட்டியாக சிந்தனை செய்யும் இயல்புடையோர், எப்பவும் சிறிது அதிரடியான பேர்வளிகளாக தான் இருப்பார்கள்.
நானும் எல்லோரைப் போலவும் பூசி முழுகினால் போல் எழுதினேன் என்றால், என் எழுத்து ஆழமில்லாததாகி, கடைசியில் அர்த்தமில்லாத ஒன்றாகவும் ஆகி விடும்.
Post a Comment