மற்ற இனங்களுக்கும் இந்திய தமிழர்களான நமக்கும் தனி மனித அளவில் அனுகு முறையிலும், குண நலன்களிலும் அடிப்படையிலேயே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதில் நாம் எழிதில் மாற்றிக் கொள்ள முடியாத, உலக நடைமுறைக்கு முறன்பாடான, பல இன சூழ்நிலைக்கு ஒவ்வாத சில குணாதிசயங்களும் உள்ளன.
1). மாற்றிக் கொள்ள முடியாத குணநலன்கள்
உதாரணத்திற்கு சீன கலாச்சாரத்தில் 'FACE' (முகம் கொடுப்பது) என்பது மிக மிக முக்கியமானதொரு சமூகவியல் அம்சம். பொதுவாகச் சொன்னால் FACE என்பது 'நடைமுறை வாழ்க்கையில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் மரியாதை / கௌரவம்'.
இது ஒரு தனி மனிதனுடைய கௌரவமாகவும் இருக்கலாம், அல்லது ஒரு குடும்பத்தினுடைய, ஸ்தாபனத்தினுடைய, இனத்தினுடைய, நாட்டினுடைய கௌரவமாகவும் இருக்கலாம். LOSING FACE (நடைமுறை கௌரவத்தை இழப்பது) என்பது சீன கலாச்சாரத்தில் சகித்துக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ளக் கூடாத உன்று.
இந்த 'நடைமுறை கௌரவத்தை' காப்பாற்றிக் கொள்வதற்காக, அல்லது பெறுவதற்காக, அல்லது பெருக்கிக் கொள்வதற்காக சீனர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். எதையும் செய்வார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிடுவார்கள்.
இந்த FACE என்பது அன்றாட வாழ்க்கையில் தனி மனித அளவில் பல ரூபங்களில் வெளிப்படும். உதாரணத்திற்கு பலர் பார்க்க ஒருவரை திட்டுவது, பிறர் பார்க்க ஒருவரின் கருத்துக்கு அப்பட்டமாக எதிர் கருத்து தெரிவிப்பது, விருந்திற்கு அழைக்கப் பட்டால் 'வர இயலாது' என்று சுருக்கமாக ஒற்றை வரியில் பதில் உறைப்பது, ஊர் பார்க்க தடுமாறும் அளவுக்கு மது அருந்தி விடுவது யாவும் 'நடைமுறை கொளரவத்தை இலப்பதாக' (LOSING FACE) ஆக கிரகிக்கபடும்.
இதனால் சீனர்கள் தொழில், வியாபாரம் போன்றவற்றில் 'அப்படி, இப்படி' என்று சிறிது முறைகேடாக நடந்து கொண்டார்களே ஆனாலும், தனி மனித 'மனிதனுக்கு மனிதன்' என்கிற அன்றாட அனுகு முறையில் ஒவ்வொரு சீனரும் இந்த முகம் (FACE) என்பதற்கு முன்னுறிமை கொடுத்துதான் நடப்பார். அதே போல் பிறரும் தனக்கு முகம் கொடுத்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். சீன சமூகத்தில் இந்த 'முகம் கொடுக்கும்' விஷயத்தில் ஒருவர் எவ்வளவு முறையாக நடந்து கொள்கிறார் என்பதை பொருத்து தான் ஒரு மனிதனின் தராதரமே நிர்ணயமாகிறது..
அதே போல் மலாய்காரர்களும் தங்கள் அரசியல், சமூக தலைவர்களை, ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களை, சமுதாயத்தில் உள்ள மூத்தவர்களை, வயதால் பெரியவர்களை சாதாரண காரணுங்களுக்காக புறக்கணித்தோ, அவமதித்தோ நடக்கவே மாட்டார்கள். அவர்கள் கலாச்சாரத்தில் அப்படி நடப்பது காட்டுமிராண்டித் தனத்திற்கு ஒப்பான ஒரு அனுகு முறை.
அந்த வகையில் இந்திய தமிழர்களான நாம் இந்த இரு இனத்தவருக்கும் நேர் மாறானவர்கள். நமது கலாச்சாரத்தில் "நியாயத்தை தட்டி கேட்பது" என்பது எல்லாவற்றையும் மிஞ்சிய ஒரு அடிப்படை சமூக இயல்பு. காரணம் நமது பாரம்பரிய கூறு அப்படி. "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் நாம். அதனால் எல்லோரோடும் வம்பு. எல்லாவற்றிகும் சண்டை.
"நீ எப்படி அப்படி பேசலாம் ! நீ பேசியது தப்பு ! நீ யாராக இருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தப்பு, தப்புத்தான்! மன்னிப்பு கேள்! " - இப்படி சீனர்களோ, மலாய்காரர்களோ எப்போதாவது பேசி பார்த்திருக்கிறீர்களா ? இந்த நாட்டில் இப்படி பேசுபவர்கள் தமிழர்கள் மட்டும்தான்.
மற்ற இனத்தவர் நம்மை 'காட்டான்கள்' என்று நினைப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஆக இந்த மாதிரியான நடைமுறைக்கு ஒவ்வாத பல குணநலன்கள் நம் இனத்திடம் ஆழப் பதிந்து கிடக்கின்றன. என்ன செய்வது? இவை ஆண்டாண்டு காலமாக நம் இனத்தின் நாடி நரம்புகளோடு ஐக்கியமான இயல்புகள் என்பதால், இவற்றை எல்லாம் நாம் எளிதில் மாற்றிக் கொண்டுவிட முடியாது.
2). மாற்றிக் கொள்ளக் கூடிய குணநலன்கள்
ஆனால் தனி மனித அளவில் நாம் இளகுவில் மாற்றிக் கொள்ள கூடிய இதர சிறு சிறு பிளைகளை நாம் திருத்தி கொள்ளலாம். திருத்தி கொள்ளத் தான் வேண்டும. அவற்றில் சிலவற்றை இங்கு பார்போம்:-
2a). குரலை உயர்த்தி உறையாடுதல்
நம் இளைஞர்களில் பலர் பொது இடத்தில் பிறரிடம் உறையாடும்போதும் சரி, தங்களுக்குள்ளாக பேசிக் கொள்ளும்போதும் சரி, குரலை உயர்த்தியே பேசுவர். அது ஏன்? பல இன சூழலில் அடுத்தவர் சங்கோஜப் படாத அளவில் நமது நடவடிக்கைகளை வைத்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது ?! பொது இடங்களில் நாம் பேசும் போதும், பலகும் போதும் நாசுக்காக, சாந்தமாக பேசிப் பலகிக் கொள்ளலாமே!
2b). எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப் படுதல்
எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படும் இயல்பை நாம் நிச்சயமாக மாற்றி கொள்ள வேண்டும். பொதுவாக வாழ்க்கையில் தோற்றபவர்கள் தான் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப் படுவார்கள். ஜெயிப்பவர்களின் பல குணாதசங்களில், உணர்ச்சியை கட்டுப் பாட்டுக்குள் வைத்து கொள்ளும் திறமையும் ஒன்று.
அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் பிர்ச்சனை இல்லாத இடத்தில் கூட பிரச்சனை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு சண்டை, வம்பு என்று கிழம்புவார்கள். இது குறித்து இங்கு ஒரு உதாரணத்தை கூறி செல்லலாம் என்று நினைக்கிறேன்.
என் இள வயதில் நான் வேலை செய்த காரியாலயத்தில் என்னோடு வேலை செய்து வந்த என் வயதை ஒத்த சீன நண்பர் ஒருவர் என்னை அவ்வப்போது "ஏய் கிலிங்" என்று கூப்பிடுவார். அதை நான் என்றுமே தவறாக பார்த்ததில்லை. காரணம் அவர் என் நண்பர். "நீ என் நண்பன்" என்கிற நினைப்பில் அவர் என்னிடம் சற்று அதிகமாகவே உறிமை எடுத்து கொண்டார். அவ்வளவுதான். மூடு வந்தால் "ஓய் ச்சினா குய்" என்று நானும் உறத்தகூவி அவரை அழைத்துள்ளேன். அதனாலோ என்னவோ 25 வருடங்கள் கடந்தும், இன்றும் நாங்கள் நண்பர்களாகவே இருந்து வருகிறோம்.
2c). உடை உடுத்தல்
நாம் போதுவாக உடை உடுத்தலில் பிற இனத்தவரை விட மிகவும் பின் தங்கியவர்கள் தான்.
முதலாவதாக, மற்ற இனத்தவரை விட குறைவாகத் தான் நாம் துணிமணிக்கென்று செலவு செய்வோம். அதனால் பொதுவாக மற்றவர்களை விட நம்மிடம் உடுத்தி கொள்வதற்கு எப்பவும் குறைவான துணிமணிகள் தான் இருக்கும்.
இரண்டாவதாக, நாம் நமது உடைகளை அடிக்கடை மாற்றி உடுத்த வேண்டும் என்பதை உணராதவர்கள் . இந்த நாட்டு சீதோஷன நிலையில் நாம் ஒரு சட்டையை தொடர்ந்து இரணடு நாட்கள் உடுத்தினோமானால் இரண்டாம் நாள் மதியமே நம்மிடம் இருந்து வியர்வை நாற்றம் வீச ஆரம்பித்து விடும். பிற இனத்தவர் யாரும் இதை நம்மிடம் திறந்து சொல்லாவிட்டாலும், இது ஒரு அப்பட்டமான, நடைமுறை உண்மை. ஆண் பெண் என்கிற வித்தியாசம் இல்லாமல் நம் இனத்தவரில் ஐந்தில் ஒரு இரண்டு பேரிடம் இருந்தாவது வியர்வை நாற்றம் வீசத் தான் செய்கிறது.
மூன்றாவதாக, நம் நிறத்திற்க்கு பொருத்தமான வர்ணத்தில் நம் உடை இருக்க வேண்டும். நம் இளைஞர்களில் பெரும்பாலோர் அவர்களின் கருமை நிறத்திற்க்கு சற்றும் பொருந்தாத கருப்பு, கனத்த நீலம், கனத்த சாக்லெட் ஆகிய நிறங்களில் உடை உடுத்தி கொள்வது சகிக்க முடியாதபடி, பார்ப்பதற்கு சற்றும் பொருத்தமில்லாமல் தோன்றுகிறது.
மற்றவர்கள் நம்மை மதித்து நடக்க வேண்டும் என்றால், முதலில் நமது தோற்றம் அவர்களை அச்சுருத்தாத வகையிலும், அருவருக்க வைக்காத வகையிலும் இருக்க வேண்டும். பல இன சூழ்நிலையில் நமது தோற்றத்திற்கு அப்புறம் தான் மற்ற விஷயங்கள் எல்லாம் என்கிற அப்பட்டமான உண்மையை நாம் ஆணி அடித்தாற்போல் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
2d). சுய தோற்ற மெருகேற்றல்
சீனர்களையும் மலாய்காரர்களையும் விட இந்தியர்களுக்கு முகத்தில் முடி முலைப்பது மிக அதிகம் என்பது யாவரும் அறிந்த உணமை. அதனால் நம்மோடு சக வேலை செய்யும் ஒரு சீனரோ, மலாய்காரரோ ஒரு வாரத்திற்கு முகத்தை சவரம் செய்யாது இருந்தால் கூட அவர்களைப் பார்க்கும் போது ஒருவருக்கு எந்த வித்தியாசமும் தெரியாது.
ஆனால் ஒரு இந்திய ஆண் மூன்று நாட்களுக்கு முகத்தை சவரம் செய்யாதிருந்தால் அவர் முகத்தில் முடியின் அடர்த்தி அப்பட்டமாக தெரிய ஆரம்பித்து விடும். அத்தோடு அவர் மீசை வைத்தவராக இருந்தால், பொதுவாக ஒரு காரியாலய சூழ்நிலையில் அவரை பார்ப்பதற்கே ஒரு சிறு அருவருப்பு தட்டும்.
இதை எல்லாம் நம்மோடு வேலை செய்யும் மற்ற இனத்தவர் யாரும் நம்மிடம் வந்து அப்பட்டமாக எடுத்துச் சொல்ல மாட்டார்கள். ஆனால் அவர்கள் மனத்தில் "இவர்கள் எல்லாம் இப்படித் தான். தன்னளவில் தன் தோற்றத்தையும், சுய சுகாதாரத்தையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாதவர்கள், வேறு என்னத்தை பெரிதாக வெட்டி முறிக்க போகிறார்கள்?" என்று நம்மைப் பற்றி ஒரு முறன்பாடான கருத்து அவர்கள் மனங்களில் ஏற்பட்டு விடும்.
நமக்கு காதால் கேட்க பிடிக்கிறதோ இல்லையோ, நம்மை பற்றிய சில உண்மைகளை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். நம் இனத்தவரை பிற இனத்தவர் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளாமல் ஒதுங்கி போவதற்கான பல காரணங்களில் ஒன்று, நம் இனத்தின் கருமை நிறம் தான் என்பது என் கருத்து.
ஏன் நாமே நம அளவிலேயே கருமை நிறம் கொண்டவர்களை சற்று தாழ்வாகத் தானே பார்க்கிறோம். இதே நிலைதான் வெளிநாடுகளில் இருந்து இங்கு படிக்க வரும் ஆப்பிரிக்க நாட்டவருக்கும். இங்குள்ள எந்த இனத்தவரும் மலேசியாவிற்கு படிக்க வரும் ஆப்பிரிக்க மாணவர்களை வரவேற்ப்பு உணர்வோடு அனுகுவதே கிடையாது. அவர்கள் வலது பக்கம் நடந்து வ்ந்தால், இங்குள்ளவர்கள் இடது பக்கமாக ஒதுங்கிப் போய்விடுவார்கள். ஆக, உலகம் முலுவதிலும் கருமை நிறம் கொண்டவர்களுக்கு வரவேற்ப்பு குறைவுதான். இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் வேண்டாம்.
உலக நிலை இப்படி இருக்க, நம் உருவத்தை, தோற்றத்தை மெருகேற்றிக் கொள்ளும் பொருட்டு 'சவரம்' போன்ற அடிப்படை சிறத்தையை கூட நாம் எடுக்காமல் இருந்தால், பிறகு "எங்களை பிற இனத்தவர் மதிக்கவில்லை", "சீனர்கள் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை" என்று முட்டாள்தனமாக சவுண்டு விடுவதில் என்ன அர்த்தம் உள்ளது?.
(நம் இனத்திடம் உள்ள குறைபாடுகளும், பிரச்சனைகளும் எவ்வளவு ஆழமானவை எனபதை இப்போதாவது உணர்கிறீர்களா ? இன மேம்பாட்டு பாடத்தை நாம் 'செரைப்பதில்' இதில் ஆரம்பித்து சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதுதான் அய்யா நமது சமூகத்தின் நிலை. புரிகிறதா ?).
சீனர்களோடு நான் ஆழப் பழகியவன். சீனர்கள் நம் இன இளைஞர்களுக்கு ஏன் வேலை கொடுப்பதில்லை என்பதை தலையங்கமாக வைத்து நான் எழுத ஆரம்பித்தால், இந்த பதிவைப் போன்று மூன்று பதிவுகளையாவது என்னால் எழுத முடியும். சீனர்கள் பார்வையில், நம் இன இளைஞர்களிடம் அவ்வளவு குறைபாடுகள் உள்ளன.
2e). மலாய் மொழியை முறையாக கற்றல்
இந்த நாட்டில் நாம் மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி வாங்குவதில் இருந்து, கோர்ட்டுக்கு போய் கேஸ் போடுவது வறைக்கும் எல்லாவற்றிக்கும் மலாய் மொழி தெரிந்திருக்க வேண்டும். மலாய் தெரியாமல் இங்கு நாம் எந்த விஷயத்திலும் ஈடுபட முடியாது. அதனால், ஓரளவுக்காவது வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்கும் தமிழர்கள் அதற்கான முதற் படியாக மலாய் மொழியை முறையாக கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் மட்டுமள்ள, அத்தியாவசியமும் கூட.
2f). குறிக்கோளுடனான வாழ்க்கை வாழ்தல்
சில தினங்களுக்கு முன்பு நான் பெட்டாலிங் ஜெயாவில் என் காருக்கான உபரி பாகங்கள் வாங்க வேண்டி நான் வாடிக்கையாக செல்லும் கார் ஸ்ப்பேர் பார்ட்ஸ்' கடைக்கு சென்றேன். அங்கு எப்போதும் கல்லாவில் உற்காந்திருக்கும் கடை முதலாளியை காணவில்லை. அவர் இடத்தில் எனக்கு நன்கு பரிச்சயமான என் இள நண்பன் 'ஆ செங்' இருந்தான்.
நான் முதன் முதலில் இந்த கடைக்கு 1990 ல் கார் உபரிப் பாகங்கள் வாங்க வேண்டி போன போதுதான், 15 வயது நிறம்பிய இந்த 'ஆ செங்' எடுபிடி பையனாக வேலைக்கு வந்து சேர்ந்திருந்தான். அதன் பிறகு கால ஓட்டத்தில், ஆயிரக்கணக்கான கார் உபரி பாகங்களின் பெயர்களையும், நுனுக்கங்களையும், விலைகளையும் ஒவ்வொன்றாக அனுபவத்தில் படித்து தெரிந்து கொண்டு அக் கடையிலேயே 'சேல்ஸ் மேன்' ஆக வேலை செய்தான்,
அதன் பிறகு சிறிது வருட உழைப்பிற்கு அப்புறம் அதே கடைக்கு 'ஆ செங்' மானேஜர் ஆனான், அதற்கு அப்புறம் இரண்டு வருட்ங்களுக்கு முன்பு, 'ஆ செங்' சொந்தமாக வியாபாரம் ஆரம்பிக்க நினைப்பதை அறிந்த கடை முதலாளி, தன் கடையிலேயே 'ஆ செங்கை' ஒரு பங்குதாரர் ஆக்கி கொண்டார்.
இப்போது கடை முதலாளி நோய் வாய் பட்டு விட்டதால், அவர் தன் கடையை 'ஆ செங்' இடமே விற்று விற்றார். இப்போது, 20 வருட கடின உழைப்பிற்கு பிறகு, தன் 35 ஆவது வயதில் 'ஆ செங்' ஒரு கடைக்கு முதலாளி.
இதே நிலைப் பாடுதான் என்னுடையதும். 17 வயதில் ஆரம்பித்து 21 வருடங்கள் பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஏற்றுமதி ஆர்டர்களை என் கைகளாலேயே முன்னின்று நடத்தி முடித்து ஆழமான அனுபவத்தை பெற்று கொண்டு, என் 38 வது வயதில் தான் நான் எனக்கென்று ஒரு சிறு ஏற்றுமதி நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
சினிமாவில் மட்டும்தான் 6 நிமிடங்கள் கூட வராத ஒரே பாட்டில், கதாநாயகன் மாட்டு வண்டி நிலையில் இருந்து, கார், பங்களா, தோட்டம், துறவு என்கிற உயர்ந்த நிலைக்கு போய் விடுவார்.
நிஜ வாழ்க்கையில் எல்லாமே மெது, மெது வாகத் தான் நடந்தேறி வரும். அந்த மெதுவான வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் நீங்கள் அடித்து பிடித்து முன்னேற வேண்டுமானால், எல்லாவற்றிக்கும் மேலாக முதலில் உங்களுக்கு ஒரு 'தூர நோக்கு குறிக்கோள் / லட்ச்சியம்' இருக்க வேண்டும். அது இல்லாமல் உங்களால் பெரிதாக ஒரு மண்ணையும் சாதிக்க முடியாது.
ஆதலால், நீங்கள் உங்களின் இளவட்ட நாட்களை முறையாக சிந்தியாது கோட்டை விட்டிருந்தீர்கள் ஆனாலும், உங்களின் பிள்ளைகளையாவது ஒரு 'தூர நோக்கு லட்ச்சியத்தின்' பால் திருப்பிவிட முயற்ச்சி செய்யுங்கள்.
- தொடரும் -
6 comments:
நீங்கள் சொல்வது உண்மைதான். தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனிதன் தான் தன்னை திருத்திக்கொள்ளவும் முயலுவான். இப்போதுள்ள சூழ்நிலையில் நம்மவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள நிச்சயம் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நம் தலைவிதியும் மாறும்.
சிவனேஸ்
வாருங்கள் சிவனேஸ்,
நாம் திருத்தி கொள்ள வேண்டிய சமாச்சாரம் எக்கச் சக்கமாக உள்ளது. ஆனால் பாருங்கள், நாம் பொருமையாக நம்மை திருத்திக் கொள்ளும் வரை உலகம் நமக்காக காத்திருக்க போவதில்லை.
நாம் நம்மை திருத்தி கொண்டு, இப்போதுள்ள உலக நடைக்கு பொருத்தமாக நம்மை ஆக்கி கொண்டு, தலையை நிமிர்ந்து பார்க்கும் போது உலகம் மறுபடியும் நம்மை விட்டு வேறு எங்கோ வெகு தூரத்தில் சென்றிருக்கும். பிறகு அந்த நிலையை எட்டி பிடிப்பதற்கு மறுபடியும் நாம் ந்ம்மை திருத்தி கொள்ள வேண்டும். மறுபடியும் உலகம் நம்மை தாண்டி சென்றிருக்கும்.
ஹும்ம்.... நினைத்தாலே தலையை சுத்துகிறது. பேசாமல் "என் அளவில் நான் எப்படி என்னை முன்னேற்றிக் கொள்வது?" என்கிற ஒற்றை லட்ச்சியத்தில் மட்டும் குறி வைத்து நம் தனிபட்ட நிலையை முன்னேற்றிக் கொள்ள பார்ப்போம்.
என்னைப் பொருத்த வரை அது ஒன்றுதான் உருப்படியான அனுகு முறை.
தங்களைப் போல், என்னைப் போல் ஒரு 100 தமிழர்கள் விழிப்புற்று தனி மனித அளவில் சுய முன்னேற்றம் கண்டால், அது இன முன்னேற்றம் தானே!
முறையான கல்வி இன்மையே இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
//என் அளவில் நான் எப்படி என்னை முன்னேற்றிக் கொள்வது?" என்கிற ஒற்றை லட்ச்சியத்தில் மட்டும் குறி வைத்து நம் தனிபட்ட நிலையை முன்னேற்றிக் கொள்ள பார்ப்போம்.//
சுய முன்னேற்றம் முக்கியம்தான் ( நாம் மட்டும் முன்னேறி நம் சுற்றத்தில் உள்ளவர்கள் பின் தங்கி இருப்பதில் என்ன நன்மை?) அதே நேரத்தில் நாம் நம் இனத்தின் குறைகளை மட்டும் சுட்டாமல் குறைந்த பட்ச சில உதவிகளையும் செய்திட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம். உதாரணத்திற்கு ( இலவச அல்லது குறைந்த பட்ச கட்டணதில்) அடிப்படை மலாய் மொழி பிரத்தியேக வகுப்பு இளைஞர்களுக்கு நடுத்திர வயதினருக்கு நடத்தப் படவேண்டும்.
மற்றும் ஒரு விண்ணப்பம், உங்களின் இந்த பதிவினை படியெடுத்து வினியோகிக்க அனுமதி கிடைக்குமா?
வாருங்கள் தமிழ்வாணன்,
உங்களின் சக இனத்தவருக்கு நீங்கள் என்ன உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அதைப் பெற்று கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும் அல்லவா?
என் அனுபவத்தில், தாங்கள் சொல்வது போன்ற (மலாய் மொழி போதனை) உதவிகளை இன அளவில் இலவசமாக கொடுப்பதற்கு எத்தனையோ நல் உள்ளங்கள் இருக்கிறார்கள். ஆனால் அப்படி கொடுக்க படும் உதவிகளை பெற்றுக் கொள்ளத் தான் ஆள் இருப்பதில்லை. தாங்கள் சொல்வது போல், சனிக்கிழமை அன்று ஒரு பொதுவான இடத்தில் குழுவி மலாய் மொழி படிப்பதைவிட, படுக்கையில் படுத்த வன்னம் ரஜனி நடித்த 'அருணாசலம்' படத்தை ஆஸ்ட்ரோவில் பார்ப்பதை தான் பொதுவாக நம் இனத்தில், உதவிகள் உண்மையிலேயே தேவைப் படும் கட்டகரியில் உள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள்.
இதை நான் விவரமாக உதாரணங்களோடு விவரித்து எழுத முற்பட்டால், அதற்கென்று இரண்டு மூன்று பதிவுகள் பிரத்தியேகமாக எழுத வேண்டும். வேண்டாம்!
என்னுடைய இந்த பதிவுகளை தாங்கள் தாராளமாக மறுபதிவுகள் செய்து வினியோகம் செய்து கொள்ளலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை.
சாமான்யன்
நம் சமுகத்தின் குறைகளை களைய நாம் தீட்டும் திட்டங்கள் அரசியல் நோக்கத்தோடும் இயக்கங்களின் சுய நலதிற்காகவும் பேருக்காகவும் புகழுக்காகவும் பொழுது போக்கிற்காகவும் இருப்பதினால் தான் அது மக்களை சென்றடையவில்லை என்பது என் கருத்து.
நம் சமுகதின் குறைகளை களைவது அவ்வளவு சுலபமானது அல்ல என்பது நிச்சயமான உண்மை. ஆனால் சில மாற்றங்களை உருவாக்க நாம் ஒரு சில திட்டங்கள் வகுத்து அதனை பொழுது போக்கிற்காக செய்யாமல் போரட்டாமாக முன்னெடுத்தோம் என்றால் நிச்சயம் வெற்றி உண்டு என் நம்பிக்கை. நாம் நமது உரிமையை கேட்பதற்கு முன் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு இன்னும் என் சமூகத்தின் மேல் நம்பிக்கை உண்டு. எதைச் செய்தாலும் பயனில்லை என்ற எண்ணதில் எதையும் செய்யாமல் இருப்பது மாபெரும் தவறு.
தமிழ்வாணன்,
ஒரு மனிதனுடைய சிந்தனை அவன் கடந்து வந்த வாழ்க்கை அனுபவங்களைப் பொருத்துதான் உள்ளது என்பது என்னுடைய கருத்து.
என் அளவில் நான் நினைப்பதைப் போன்று தாங்களும் நினைக்க வேண்டும் என்று அவசியமில்லை. தங்களுக்கு சரி என்று படும் வகையில் தாங்கள் சமுதாயத்திற்கான தங்கள் சேவைகளைச் செய்யலாம்.
தங்களின் வயது என்னவென்பது எனக்கு தெரியாது. ஆனால், என் வயது 57. நான் திருமணம் ஆன புதிதில் ரயில் தண்டவாளத்திற்கு பக்கத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கள்ளத்தனமாக கட்டப் பட்ட ஒற்றை அறை கொண்ட பலகை வீட்டில், மூன்று குழந்தைகளோடு எட்டு வருடங்கள் வாழ்ந்தவன்.
அதே நேரத்தில் வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை எனக்கென்ற பாணியில் மனதில் ஆணித்தரமாக ஏற்றிக் கொண்டு, முண்டி அடித்து, பல முறை விழுந்து எந்திரித்து, கடைசியில் வாழ்க்கையை ஒரளவுக்கு (அல்ல பேரளவுக்கு) வெற்றி கொண்டவன்.
40 நாடுகளுக்கு போய் வந்திருக்கிறேன். நம் இனத்தவரை போல நூற்றுக்கும் மேற்பட்ட இனத்தினரை பார்த்தும் பழகியும் இருக்கிறேன்.
"தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்று நம் பாட்டுக்கள் சொல்வது போல் நம் மக்கள் அப்படி ஒன்றும் பிரமாதமானவர்கள் அல்ல என்பது என் கருத்து.
நம்மை விட எல்லா விதத்திலும் சிறந்த இனங்கள் எத்தனை எத்தனையோ உள்ளன. ஆனால் என் கருத்தை ஒத்த அதே கருத்தை தாங்களும் கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் அல்ல. தாங்கள் தங்களுக்கு சரி என்று பட்ட வழியில் தங்களுக்கு தோன்றும் வகையில் நம் இனத்திற்கு நல்லது செய்யுங்கள்.
ஆனால் எதை செய்ய விளைந்தாலும், நன்கு யோசித்து, அதன் பிறகே செய்யுங்கள். வாழ்க்கை, வாய்ப்பு, வயது எல்லாம் குறிப்பிட்ட அளவிற்கு உட்பட்டவைதான். அதனால் தங்களுக்கு எது முக்கியம் என்பதை ஆழமாக யோசித்து நிர்ணயம் செய்து கொண்டு, அதன் பிறகு அதற்கு தோதான வழியில் செல்லுங்கள்.
இது குறித்து நான் 'ஈஸ்வரா' என்பவரின் ப்லோக்கில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவை எழுதினேன். அதை இங்கு படித்து பாருங்கள் (அயிட்டம் 3) - www.peepingatyou.blogspot.com
சாமான்யன்
Post a Comment