Wednesday, May 13, 2009

உன்னையே நீ அறிவாய் ! (மாறிய உலகில், மாறத் தெரியாத நாம்) - பாகம் 9

சென்ற பதிவில் "வேறு எல்லா அரசாங்க திட்டங்களையும் மீறி மலாய்க்கார மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஒன்றே மலேசிய அரசாங்கத்தில் சகல நிலைகளிலும் ஒலிக்கும் தாரக மந்திரமாக மாறியுள்ள நிலைப்பாடு, வேறு யாரையும் விட இந்த நாட்டில் உள்ள இந்தியர்களை (குறிப்பாக மலேசிய தமிழர்களை) வெகுவாக பாதித்திருக்கிறது" என்று குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதை இந்த பதிவில் முடிந்த அளவு விளக்கியுள்ளேன்:-


1970 க்கு முந்தைய கால கட்டத்தில் மலேசிய இந்தியர்களின் நிலை

நான் பார்க்க 1950 - 1960 களில் இந்த நாட்டில் இந்தியர்களின் நிலை ஓரளவிற்கு கம்பீரமானதாகத் தான் இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் ரப்பர் எஸ்டேட்டுகளிலும், ரயில்வேயிலும், சாலை நிர்மாணிப்பு துறையிலும் கூலி ஆட்களாக வேலை செய்து வந்தனர்.

சிறிது படித்தவர்கள் டெலிகாம்ஸ், மின்சார வாரியம், ரயில்வேஸ், தபால் அலுவலகம், பொதுப்பணி, கல்வி அமைச்சு போன்ற அரசாங்க துறைகளிலும், தோட்டங்களிலும், சில தனியார் நிறுவனங்களிலும் ஆசிரியர்களாகவும், குமாஸ்தாக்களாகவும், டெக்னிஷியர்களாகவும் பணி புரிந்தனர்.

பல்கலைக்கழக படிப்பு முடித்தவர்கள டாக்டர்களாகவும், வழக்குரைஞர்களாகவும், இஞ்சினியர்களாகவும் செயல் பட்டு வந்தனர். வர்த்தகர்களாக வந்தவர்கள் வாணிபம், வர்த்தகம் என்று இருந்தனர்.

ஆக அந்த காலக் கட்டத்தில் எல்லா நிலைகளிலும் இந்தியர்களுக்கு இந்த நாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறந்த பங்கு இருக்கத்தான் செய்தது.

அதன் பிறகு 1970 ஆம் ஆண்டு தான் மேற்குறிப்பிட்ட புதிய பொருளாதாரக் கொள்கையும் அதை ஒட்டிய "எல்லா நிலைகளிலும் மலாய்காரர்களுக்குத் தான் முன்னுறிமை" என்ற கொள்கையும் அமுலாக்கப் பட்டன.

அத்தோடு இந்தியர்களுக்கு பல காலமாக அரசாங்கத்திலும், அரசாங்க சார்புள்ள ஸ்தாபணங்களிலும், சில தோட்டத்துறை நிறுவனங்களிலும் இருந்து வந்த சாதகமான அனுசரனையும் ஒரு முடிவுக்கு வந்தது.


1970 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியர்களுக்கு (குறிப்பாக தமிழர்களுக்கு) ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்கள்

இந்தியர்கள் பின்னடைவிற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் என் மனதிற்கு இந்த நாட்டில் நடந்த கீழ்கண்ட மூன்று நடவுகள் / நிலைப் பாடுகள் மிக முக்கிய காரணங்களாக தெரிகின்றன:-


1). மலாய் மொழி ஆட்சி மொழியாக உருவெடுத்தது

மலாயா சுதந்திரம் அடைவதற்கு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்த நாட்டின் ஆட்சி மொழி ஆங்கிலமாகத் தான் இருந்து வந்ததுள்ளது. இதன் காரணமாக அன்றைய மலாய்காரர்களுக்கு நாட்டு ஆழுமையிலும், வர்த்தகத்திலும், பிற நடப்புகளிலும் பரவலாக அதிக உடன்பாடும், ஈடுபாடும் இல்லாத நிலையே இருந்து வந்திருந்தது.

அந்த கால கட்டம் (மலாய்காரர்களுக்கும் சீனர்களுக்கும் ஆங்கில அறிவு அதிகம் இல்லாது இருந்த நேரம்) ஆங்கிலத்தை நன்கு பேச, படிக்க, எழுத தெரிந்த யாழ்பான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் வரப் பிரசாதமான ஒரு நேரம். சுருங்கச் சொன்னால், அது அவர்கள் கொடி கட்டி பறந்த ஒரு கனாக் காலம்.

ஆனால் சுந்திரத்திற்கு பிறகு, என்றைக்கு மலாய் தலைவர்கள் ஆங்கிலத்தை ஒதுக்கி விட்டு, மெல்ல, மெல்ல மலாய் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாகவும், பள்ளிகளில் போதனை மொழியாகவும் மாற்ற ஆரம்பித்தார்களோ, அன்றிலிருந்து இந்த இந்திய இனங்களுக்கு பல காலமாக அரசாங்கத்திலும், தனியார் துறையிலும் இருந்து வந்த அனுகூலமான சூழ்நிலை அடியோடு மாறியது. அதற்கு முன்பு அவர்கள் பிரத்தியேகமாக செய்து வந்த எல்லா வேலைகளும் மலாய்க்காரர்களுக்கு செல்ல ஆரம்பித்தன.


2). இந்தோனிசிய கள்ளக் குடியேறிகளின் வருகை

1970 ஆம் ஆண்டு தொடங்கி, 1990 ஆம் ஆண்டுக்குள் மலேசிய பொருளாதாரத்தில் மலாய்காரர்களின் பங்கீட்டை 30 விழுக்காடாக உயர்த்துவது என்பது தேசிய குறிக்கோளாக உருப்பெற்ற பட்ச்சத்தில், இந்த திட்டத்தை எப்படியாவது முழுமையாக செயல் படுத்திவிட வேண்டும் என்கிற முனைப்போடு மலாய் தலைவர்கள் அரசாங்கத்தின் எல்லா கிளைகளையும் முடக்கி விட்டு, அமுல்திட்டங்களை துரிதப் படுத்தினர்.

அப்படி அபரிமிதமான வேகத்தில் திட்டங்கள் துரிதப் படுத்தப் பட்ட காலக் கட்டத்தில், சீனர்கள் வியாபாரம் தொழில் கல்வி என்று எல்லா நிலைகளிலும் திறமைசாலிகளாக இருந்த படியால், நாடு அசுர வேகத்தில் வளம்பெற்ற போது அவர்களும் அந்த வளர்ச்சியோடு சேர்ந்து மிக அதிக வளம் பெற்றனர்.

((1970 ஆம் ஆண்டு மலேசிய பங்குச் சந்தையில் 22.5 விழுக்காடு பங்குறிமையை மட்டுமே வைத்திருந்த சீனர்கள், 1990 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டவர்களிடம் இருந்த பங்குகளையும் வாங்கி, மலேசிய பங்கு சந்தையில் தங்களுக்கு இருந்த பங்குறிமையை 45.0 விழுக்காடாக உயர்த்தி கொண்டுள்ளனர். அதே காலக் கட்டத்தில் மலாய்காரர்கள் தங்கள் பங்குறிமையை 2.4 விழுக்காட்டிலிருந்து, 19.0 விழுக்காடாக உயர்த்தி கொண்டுள்ளனர். இந்தியர்களின் பங்குறிமை 1970 லும் சரி, 1990 லும் அதே 1.0 விழுக்காடாகத் தான் இருந்திருக்கிறது)).

ஆனால், தமிழர்கள் தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த பாஷையும் தெரியாத நிலையில், அதுவரை எஸ்ட்டேட் சுழ்நிலையைத் தவிர வேறு எதையும் பார்த்தறியாத நிலையில், பிற இனத்தவர்களோடு பழகிய அனுபவம் இல்லாத நிலையில், தாழ்வு மனப்பான்மையால் நெஞ்சை நிமிர்த்தி பேசக்கூட திராணியற்ற நிலையில், தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைக் சறியாக புரிந்து கொள்ள தெரியாத, முடியாத ஏமாளிக் கூட்டமாகத் தான் இருந்திருக்கிறோம்.

அதற்கு தகுந்தாற்ப் போல் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் கடின உழைப்பாளிகளான இந்தோனிசிய கள்ளக் குடியேறிகளுக்கு தோட்டதுறை வேலைகளும், கட்டுமானம் உள்ளிட்ட மேலும் பற்பல பணிகளும் சென்றடைந்தன..

இது கால ஓட்டத்தில் தமிழர்களை பல வகைகளில் பாதித்தாலும், நாட்டின் துரித வளர்ச்சிக்கு (அதன் மூலம் ஏற்பட்ட மலாய் இனத்தின் மிகத் துரித வளர்ச்சிக்கு) இந்தோனிசியர்களின் பங்கு முக்கியமாக அமைந்ததால், அரசாங்கமும் அதை சுத்தமாக கண்டுகொள்ளாமல் விட்டது.

மேலும் மலாய் மொழியை சரளமாக பேசக் கூடியவர்களாகவும், இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்களாகவும் இந்தோனிசியர்களும், வங்காள தேசத்தவர்களாகவும் இருந்தது இந்த இனத்தவர்களுக்கு மேலும் அனுகூலமாக அமைந்தது.

கால ஓட்டத்தில் பிற நாட்டு தொழிலாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, இன்று மலேசியாவில் உள்ள வெளி நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ள நிலைக்கு இட்டுச் சென்று விட்டது.

இப்படி நமக்கு முறையாக வந்து சேர்ந்திருக்க வேண்டிய பல கீழ்மட்ட வேலை வாய்ப்புகளும், சிறு அங்காடி வியாபார வாய்ப்புக்களும் கூட இந்த நாட்டிற்கு சற்றும் சம்மந்தமில்லாத இனங்களுக்கு போய் சேர்ந்ததும், நாம் இந்த நாட்டில் இதுவரை தேராமல் போனதற்கு மற்றுமொரு காரணம்.

சரி, மலேசிய அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து அதிக அளவு தொழிலாளர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்ததர்க்கான காரணம் என்ன என்று நினனக்கிறீர்கள்?

மலாய்காரர்களின் பங்குறிமையை இருபது வருடங்களுக்குள் 30 விழுக்காடு ஆக்க வேண்டும் என்றால், அரசாங்கம் எல்லா பொருளாதார திட்டங்களையும் துரிதப் படுத்தி ஆக வேண்டும். அத்தோடு புதிய பொருளாதார கொள்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனில் நாட்டில் வேலை வாய்ப்புக்கள் அதிக அளவு மேம்படுத்த பட வேண்டும்.

இதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மலேசியாவில் மூலதனம் செய்வதற்கு தோதாக தொழிலாளர் சட்ட திட்டம் இருக்க வேண்டும். பாலிசை அகற்றி விட்டு பச்சையாக சொன்னால் - இந்நாட்டில் தொழிலாளிகளுக்கு கொடுக்கப் படும் சம்பளம் குறைவானதாக இருக்க வேண்டும், தொழிற்சங்க நடவடிக்கைகள் குறைக்கப் பட வேண்டும்.

இதையெல்லாம் அமுல் படுத்த வேண்டுமானால், வெளிநாட்டில் இருந்து சட்ட பூர்வமாகவோ (அல்லது கள்ளக் குடியேறிகளாகவோ) தொழிலாளர்களை இங்கு அனுமதிக்க வேண்டும்.

இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்து குடியுறிமை பெற்றவர்கள் தங்களுக்கு அதிக சம்பளம் வேண்டும், வீட்டு வசதி வேண்டும், போனஸ் அலவன்ஸ் எல்லாம் வேண்டும், கூடுதல் மருத்துவ வசதி வேண்டும் என்று கொடி பிடிப்பார்கள்.

ஆனால் ஜனத்தொகை அதிகமாக கொண்ட இந்தோனீசியா, வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து வரும் கள்ளத் தொழிலாளர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு 'கப் சிப்' என்று வாயை மூடிக் கொண்டு வேலையை உருப்படியாக செய்வார்கள்.

நடைமுறையில் அரசாங்கத்தின் இந்த தொழிலாளர் கொள்கை நம் இனத்தை எப்படி பாதித்து இருக்கிறது என்றால்:-

1980 களில் நாடு துரித பொருளாதார வளர்ச்சி கண்ட போது, எல்லா இனங்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் அதிகரித்த போதிலும், மலேசியாவில் கணிசமான வெளிநாட்டு தொழிலாளர் எண்ணிக்கை இருந்ததால், நம்மை ஒற்றிய மற்ற நாடுகளை விட இங்கு தொழிலாளர் சம்பளம் குறைவாகவே தான் இருந்து வந்துள்ளது.

இதில் கவனிக்க படவேண்டியது என்னவென்றால், சம்பளம் குறைவாக இருந்தது மற்ற இரண்டு இனங்களையும் விட தமிழர்களைத் தான் வெகுவாக பாதித்தது. நம் இனத்தவர் தான் தோட்டங்களில் தங்களுக்கு இருந்த வேலையையும், அத்தோடு வந்த வீட்டு வசதியையும், கூட்டு இன வாழ்க்கை சூழ்நிலையையும் விட்டு விட்டு பட்டன விழும்புகளுக்கு கையில் எதுவுமே இல்லாமல் வந்தவர்கள்.

சீனர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் எந்த சூழ்நிலையையும் சவாளாக ஏற்றுக் கொண்டு முண்டி, அடித்து வாழ்க்கையை அட்டகாசமாக வெள்பவர்கள். சம்பளம் போதவில்லை என்றால், அதற்காக ஏதாவது உபாயம் கண்டுபிடித்து ஊதியத்தை மேம்படுத்தி கொள்ள தெரிந்தவர்கள்.

மலாய் இனத்தவர் இந்த நிலைப்பாட்டால் பாதிக்க பட்டார்களா என்று பார்த்தால். நிச்சயமாக இல்லை. இந்த குறைவான சம்பள நிலை மலாய்காரர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக கூறலாம்.

காரணம், ஒரு மலாய் குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் இருந்தால், அவரவர் படிப்பை பொருத்து, அவர்கள் ஐவருக்கும் அரசாங்கத்திலோ, தனியார் நிறுவனங்களிலோ, தொழிற்சாலைகளிலோ வேலை கிட்டியது.
அது போக மற்ற இனங்களுக்கு இருந்த பல செலவுகளை மலாய்காரர்களுக்கு வைக்காமல், அரசாங்கமே அவர்களின் பெரும்பாலான் தேவைகளை பூர்த்தி செய்தது.

கிம்மாஸ் என்ற மலாய்காரர்களுக்கான பாலர் பள்ளியில் இருந்து, குறைந்த விலை வீட்டுடமை திட்டங்களில் இருந்து, மலாய் பிள்ளைகளின் பிரத்தியேக படிப்பிற்கென்று அரசாங்கத்தால் முழுமையாக முதலிடு செய்யப்பட்ட சிறப்பு பள்ளிக்கூடங்களில் இருந்து, பங்கு பரிவர்த்தனையில் மலாய்காரர்கள் பங்கு பெருவதற்கென்று அமைக்க பட்ட 'அமானா சாஹாம் நேஷனல்' போன்ற பங்கு நிதி திட்டங்களில் இருந்து, அவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப் பட்ட சிறப்பு சலுகைகளில் இருந்து, மலாய் பிள்ளைகளுக்கு பொது பல்கலைகழகங்களில் வழங்கப் பட்ட முன்னுறிமையில் இருந்து, அவர்களுக்கு வழங்கப் பட்ட உபகாரச் சம்பளங்களில் இருந்து எத்தனை எத்தனையோ நூற்றுக் கணக்கான வழி வகைகளில் மற்ற இனஙகளை காட்டிலும் மலாய் இனத்தவர் பயன் அடைந்த காரணத்தால், மலாய்காரர்களுக்கு இந்நாட்டில் அவர்கள் வாங்கும் சம்மளம் குறைவாக இருந்தாலும், போதுமானதாகவே இருந்தது.


3). சீனர்கள் அரசாங்கத்திடம் இருந்து எதையும் பெரிதாக
எதிர்பார்க்காத நிலைப்பாடு

மலேசிய இந்தியர்களின் துரதிஸ்டங்களிலேயே பெரிய துரதிஸ்டம் என்னவென்றால், மற்ற எந்த இனமும் அல்லாமல், சீனர்கள் நம்மோடு சேர்ந்து மலேசியாவில் ஒரு சிறு பாண்மை இனமாக அமைந்தது தான்.

எந்த நாட்டிலும் சரி, சீனர்கள் யார் உதவியையும் எதிர் பார்த்து வாழ்வது கிடையாது. '"எங்களை சுயமாக விட்டு விடுங்கள். எங்கள் வாழ்க்கையை உயர்த்தி கொள்வது எப்படி என்பது எங்களுக்கு தெரியும்", என்கிற ஒரு கம்பீர குணாதிசியம் கொண்டவர்கள் சீனர்கள்.

ஆக, 24.0 விழுக்காடு ஜனத்தொகையை கொண்ட சீனர்கள் தங்களுக்கு என்று எந்த பிரத்தியேக சலுகைகளையும் கேட்டு பெறாத நிலையில், வெறும் 7.5 விழுக்காடு ஜனத்தொகையை உடைய நமக்கு அரசாங்கம் எப்படி பிரத்தியேகமான சலுகைகளை செய்து கொடுப்பார்கள்?

அரசாங்கத்திடமிருந்து சீனர்கள் எதாவ்து பிரத்தியேகமாக கேட்டு பெற்றிருந்தார்கள் என்றால், அவர்களோடு சேர்ந்து இந்தியர்களும் ஏதாவது விஷேசமாக பெற்று கொண்டிருக்கலாம். ஆனால், சீனர்கள் அரசாங்கத்திடம் இருந்து மிகுதியாக எதையுமே கேட்பது கிடையாது.

அவர்கள் கேட்பதெல்லாம் கூடுதலான சீனப் பள்ளிகள். அப் பள்ளிகளுக்கு சிறிது நிதி ஒதுக்கீடு. சீனப் பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ற பல்கலைக்கழக வாய்ப்பு, மிகத் திறமையான மாணாக்கர்களுக்கு சில உபகாரச் சம்பளங்கள். அரசாங்க நிலையில் தொழிதுறை வாய்ப்புக்கள். அவ்வளவுதான்.

அவர்கள் இனத் திறமையையும், சீனர்கள் இந்த நாட்டிற்கு செய்து வரும் மிகப் பெரிய பொருளாதார சேவையையும், மிகக் கூடுதலாக அவர்கள் இனம் கட்டும் வருமான வரியையும் வைத்து அவர்கள் கேட்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது, சீனர்கள் தங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் சலுகைகள மிக, மிக, மிகச் சாதாரணமானவையாகவே எனக்கு படுகின்றன.

இதற்கு நடுவில் நாம் நமது இனத்தின் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளையும், விண்ணப்பங்களையும் அரசாங்கத்தின் முன் வைப்பது சிரமமான வேலையாகவே இன்று வரை இருந்து வந்துள்ளது.

அதற்கு தகுந்தாற்ப் போல் நமது தானைத் தலைவர் - "என்னைத் தவிர வேறு எந்த லப்பனாலும் இந்தியர்களின் நலங்களை பாதுகாக்க முடியாது", என்று கூடாரம் அடித்து 30 வருடங்களாக டேரா போட்டு உட்கார்ந்து உள்ளார்.

உலகம் நம்மை பார்த்து நகைக்கின்றது. காலம் நம்மை தாண்டி ஒடுகின்றது. நாம் நின்ற இடத்திலேயே நிற்கின்றோம் - திக்கும் தெரியாது, திசையும் தெரியாது. பேந்த, பேந்த முழித்த வண்ணம்.

16 comments:

Anonymous said...

Dear Samaniyan ..
Iam a regular reader . Pls continue Your thoughts.
One Request Just like Periyar You should put your thoughts without thinking about other's comment ...because others can only Comment!

anbulla
Tamilnadu tamizhan

சாமான்யன் said...

ஹல்லோ தமிழ்நாடு தமிழன்,

கடல் கடந்து, நாடு விட்டு நாடு வந்திருப்பினும், இங்குள்ள தமிழர்களின் நிலையை அலசி ஆராயும் இந்த ஊடகத்தின் பால் கரிசனம் கொண்டு ஊக்குவிப்பு கொடுத்து பின்னூட்டம் விட்டுச் சென்றிருக்கும் தங்களின் நல்லெண்ணத்திற்கும், சமுதாய உணர்விற்க்கும் எனது ஆழ்ந்த நன்றி.

நம் இனம் தனக்கென்று தானாக எதையும் செய்து கொள்ளத் தெரியாது இனம். வழியில் போகிற யாராவது அவர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று காலங்காலமாக எண்ணி வந்திருப்பவர்கள் நாமள்.

என் எண்ணம் அதற்கு நேர் விரோதமானது - " நீ தான் உன்னை மாற்றி கொள்ள வேண்டும். நீ தான் உயர்ந்தெலும்ப வேண்டும். அதற்கு 'ரோஷம்' என்பது அடிப்படையிலேயே உன்னிடம் இருக்க வேண்டும் " என்பது என்னுடைய நிலைப் பாடு.

ஆனால், இப்படிப் பட்ட அனுகுமுறை எல்லாம் இங்கு எடுபடாது. காரணம் நாம் தலைமுறை, தலைமுறையாக அடிமைப் படுத்த பட்ட நிலைத் தன்மையோடுதான் இருந்து வந்திருக்கிறோம்.

நான் இன்னும் இரண்டு பதிவுகள் மட்டும் எழுதியதோடு, இந்த தொடரை முடித்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். அதன் பிறகு எதையுன் எழுதிகிறாப் போல் எனக்கு உத்தேசம் இல்லை.

எது எப்படி இருப்பினும், என் எழுத்தையும் மதித்து 'தொடர்ந்து எழுதுங்கள்' என்று கேட்டு கொண்ட தங்களுக்கு மறுபடியும் எனது மனமார்ந்த நன்றிகள்.

சாமான்யன்

sivanes said...

Dear Samaniyan, Wonderful thought! pls do continue.

சாமான்யன் said...

வாருங்கள் விக்னேஸ்,

ஒரு வரி ஊக்குவிப்பு என்றாலும், என் ஊடகத்தை தேடி வந்து படித்து, எழுதுபவரை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைத்து, பின்னூட்டம் விட்டுச் சென்றிருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இல்லை விக்வேஸ், சிரமப் பட்டு சிந்தித்து, நேரம் ஒதுக்கி எழுதுகிறோம். அதை படிப்பதற்கு ஆள் இல்லாத நிலையில் தொடர்ந்து எழுதுவது ஏதோ தானாக பேசிக் கொள்வது போல் தோன்றுகிறது.

இருப்பினும் என் எழுத்து நிறுத்தப் பட்டு விடக் கூடாது என்று நினைத்து, எனக்கு 'தொடர்ந்து எழுதுங்கள்' என்று வேண்டுகோள் விடுக்கும் உங்களை போன்றவர்களை பார்க்கும் பொழுது, சரி "நமது சிந்தனையிலும், எழுத்திலும் ஏதோ உருப்படியான சமாச்சாரம் இருக்கிறது. இல்லையென்றால் இவர்களெல்லாம் 'நிறுத்தாதீர்கள்' என்று மெனக்கெட்டு, வந்து சொல்வார்களா?" என்கிற ஒரு சிறு திருப்தி என் மனதில் ஏற்படுகிறது.

மறுபடியும் நன்றி விக்னேஸ்.

சாமான்யன்

சாமான்யன் said...

மன்னிக்கவும், விக்னேஸ் அல்ல .... சிவனேஸ் :-)

Esywara said...

I have not read your blog for a very long time...
so i read the whole series back again from the first to this one...

I like this post very much ,exceptionally...


//மலேசிய இந்தியர்களின் துரதிஸ்டங்களிலேயே பெரிய துரதிஸ்டம் என்னவென்றால், மற்ற எந்த இனமும் அல்லாமல், சீனர்கள் நம்மோடு சேர்ந்து மலேசியாவில் ஒரு சிறு பாண்மை இனமாக அமைந்தது தான்.//

Maybe they are our lucky charm... that made us to discover who we are... what made us to be like this... and most importantly..
how we going to change it for a better one...

Being a minority with all kind of biggest disadvantages on their hand the Malaysian Indians definitely, had/will consume extra time in realising themselves and working it out.

As in the case of Malaysian Tamils.. ..
the other sub-ethnic groups were in an advantage ,as you have said in earlier posts, as in number ( being small allowed vast and fast progression), and other socio - economic factors...

The Tamils particularly has been working it out (according to my knowledge) although slow ,not in a huge scale, but significant...
but yet we are facing more probs than ever..

getting a business license has never been easy..
indian graduates risks more chances of being unemployed...

well.. theres many more...

As long as there are people like you to point the weaknesses as they are (very few people has done it), the society will learn more to equip itself ( referring the youths) for the present day and future..

excitingly waiting for your nexts..

சாமான்யன் said...

தம்பி ஈஸ்வரா,

எங்கே அப்பா போனாய்? என் முதல் பதிப்பை படித்து விட்டு 'seriously good' என்று பின்னூட்டம் விட்டு விட்டு சென்றாய். அதன் பிறகு ஆளையே காணோமே.

சரி, இப்போதுதாவது வந்தாயே, மிகுந்த சந்தோஷம். தம்பீ என் சொல்வது எல்லாம் எனக்கு புரிகின்றது.

வியாபார லைசன்சு கிடைக்காதது, இந்தியர்களுக்கு வேலைகள் கிடைக்காதது என்பது எல்லாம் எனக்கு நன்கு பரிட்ச்சயமான கதைகளே.

ஆனால், இந்த கதைகளுக்கு எல்லாம் வேறொரு வியாக்கானம் (angle or point of view) இருக்கிறது. அதை எல்லாம் உனக்கு விளக்க வேண்டும் என்றால், அது குறித்து நான் உனக்காக ஒரு புதிய பதிவு எழுத வேண்டும். ஆனால் இந்த 'மலேசிய தமிழன்' புலோக்கை அடுத்த பதிவோடு நான் நிறுத்தப் போகிறேன்.

வேண்டுமானால், உன்னுடைய புலோக்கில் நான் உன் கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் 'Guest Article' ஒன்று எழுதி விட்டுச் செல்கிறேன். சம்மதம் என்றால், மற்றுமொரு பின்னூட்டம் வழி உன் சம்மதத்தை தெரிவி.

சாமான்யன்

Esywara said...

இணைய தளத்தில் நான் எழுதும் முதல் தமிழ் வார்த்தைகள் இவை. ;)
மிகுந்த குதூகலத்தில் உள்ளேன்.

தங்கள் சித்தம் அப்படியே ஆனால் அது எனது அதிர்ஷ்டம்.
தங்களைப்போன்று எழுத்து ஆற்றல் மட்டுமின்றி , கருத்துச் செறிவும்
பொருந்திய எழுத்து படிவங்களைப் கண்டு பிடிப்பதே அரிது,
அவை எனது வலைப்பக்கத்தில் இடம் பெறுவது
ஆனந்தத்திலும் ஆனந்தம் .

என்ன ஆவணங்களைச் செய்ய வேண்டும் என்பதை கட்டளை இடுங்களைய்யா.


சாமான்யனின் சாமான்ய வாசகன்

சாமான்யன் said...

அடேங்கப்பா ஈஸ்வரா,

நீ தமிழ் மொழியில் பெரிய 'உஸ்டாட்' ஆக இருப்பாய் போல் இருக்கிறதே. 'செறிவும்' என்ற வார்த்தையை நான் என் வாழ்நாளில் ஒரு முறை கூட பாவித்ததே கிடையாதப்பா ! பார்க்க போனால், உன்னிடம் இருந்து நான் தான் கற்றுக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது :-D

என்னுடைய 'உன்னையே நீ அறிவாய்' தொடரின் கடைசி பாகத்தை முடித்து கொண்டபின், உன் வலைப்பக்கத்திற்கு ஒரு கட்டுரையை எழுதி அதை உனக்கு ஈ-மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன். அதை நீ பிரசுரம் செய்.

அதற்கு முன்பு நான் என்னென்ன விஷயங்களை பற்றி எழுத வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயோ, அவற்றை ஒரு பட்டியல் போட்டு என் ஈ-மெயிலுக்கு அனுப்பி வை. அதன்படி என் கட்டுரையை அமைத்து கொள்ள முயல்கிறேன்.

சாமான்யன்

Esywara said...

தங்களைப் போன்றோர் அனுபவங்களின் முன்னோடிகள் .....
அனுபவங்கள் எனப்படுவது மிகப் பெரிய ஆற்றல்கள் ..
தங்களின் அந்த ஆற்றல் என்னை போன்றோருக்கு இது தான் தேவை என்பதை உணரும் ... உணர்த்தும்
அதனையே எழுதுங்கள்.
நன்றி

சாமான்யன் said...

ஈஸ்வரா,

அருமையான தலைப்பு. எவ்வளவோ எழுதலாம். அத்தோடு நான் ஆளமாக மூலையைக் கசக்க வேண்டிய அவசியமும் இருக்காது. நடந்தவையை எழுதுகிற வேலை. கம்யூட்டர் முன்னால் உற்காந்து கட கட வென்று எழுதி தள்ளி விடலாம். என் அனுபவங்கள் என்ற தலைப்பில் நான் எழுதுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. படிக்கும் உன்னை போன்ற இள்ஞர்களுக்கும் அது மிக சுவார்ஸ்யமாகவும் இருக்கும்.

ஆனால் தம்பீ, இதை எத்தனை பேர் படிப்பார்கள் என்று உனக்கு ஏதாவது யூகம் இருக்கிறதா? உன் நண்பர்கள் ஒரு 30 பேரையாவது இந்த பதிப்பை படிக்க வைக்க உன்னால் முடியுமா? முடியும் என்றால் ஒரு ஆயிரம் வார்த்தைகளில் இருந்து, ஆயிரத்து ஜநூறு வார்த்தைகளைகளுக்குள் அட்டகாசமான ஒரு பதிப்பை உனக்கு நான் தருகிறேன்.

சாமான்யன்

Esywara said...

கண்டிப்பாக
நானும் எனது படைகளும் சேர்ந்து 180 பேர்களை படிக்க வைக்க முடியும்
தொடருங்கள் உங்கள் பணியை ...

சாமான்யன் said...

அடேங்கப்பா,

ஈஸ்வரா, 180 பேர் என்பது பம்பர் குலுக்கில் முதல் பரிசு விழுந்த மாதிரி! இது வரை நம்ம "டார்கட் ஆடியன்ஸ் மார்க்கட்டிங் போக்கஸே" தப்பாக இருந்திருக்கும் போல இருக்கேப்பா !

மற்றொரு விஷயம், என் பதிவு தமிழில் தானே இருக்க வேண்டும்? உன் புலோக் ஆங்கிலத்தில் இருப்பதால் கேட்கிறேன். இல்லை ஆங்கிலத்தில் வேண்டுமா?

சரி, எந்த மொழியில் என்றாலும் இந்த மாதம் 31ஆம் தேதி மாலை மணி 4.00 க்கும், 6.00 க்கும் இடையில் என் பதிவு உன் ஈ-மெயில் 'in box' ல் இருக்கும்.

சாமான்யன்

Esywara said...

தமிழிலேயே எழுதுங்கள் , அது மாணவர் சமுதாயத்திற்கு ஆகி வரும்....

Anonymous said...

Anbu Saamaanyan avargalukku,
en manamaarntha nandri. Naan oar tamizh aasiriyan. Malaiyaaliyaaga irunthaalum tamizhp patru mikkavan. en 4 pillaigalum tamizhp palliyil paditahavargal.
thanggaludiya katturaiyaip paditha pozhuthu ennai naan puthuppithukkondathupol irunththathu. Unmaithanai uraitha thaanggal innum pala unmaigalai ezhutha vendum ena virumbugiren.
thanggalin padaippu samuthaayathirkku migavum payanalikkum enbathil iyamillai.
meendum nandri.
Sulues.

சாமான்யன் said...

வாருங்கள் Sulues அவர்களே,

இந்த மாதிரி பதிவுகளை எழுதுவது உன்மையிலேயே சிறிது கஸ்டமான காரியம் தான். நம் அடி மனதில் எவ்வளவோ எண்ண ஓட்டங்கள் தேங்கி நின்றாலும் என்ன சொல்ல போகிறோம், அதை எப்படிச் சொல்லப் போகிறோம், என்ன உதாரணங்களைச் சொல்லி சொல்லவந்ததைச் சொல்வது என்பதை முடிவு செய்வதற்கே சில நேரங்களில் பல வாரங்களுக்கு நான் முலையைக் கசக்க வேண்டி இருக்கும்.

அப்படி கஸ்டப் பட்டு எழுதுகிற படைப்பை படிப்பதற்கு இங்கு ஒரு 50 பேர் கூட இல்லாமல் இருப்பது மன வருத்ததை தருகிறது.

எந்த காரியத்தையும் முறையாக செய்து முடிக்க வேண்டும் என்கிற அடிப்படை கொள்கை எனக்கு இருப்பதனால் "படிப்பதற்கு ஆள் இருக்கிறதோ, இல்லையோ நாம் ஆரம்பித்த இந்த தொடரை உருப்படியாக முடித்து விட வேண்டும்" என்கிற வேட்கையோடு எழுதுகிறேன். இதற்கு அப்புறம் நான் எதையும் எழுத நினைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் அடி மனத்தில் இருந்து வெளிப் படும் தங்களைப் போன்றோறின் பின்னூட்டங்கள் உண்மையிலேயே என் மனதை நெகிழ வைக்கின்றன. நான் கஷ்டப் பட்டு எழுதியதற்கான பலனை உங்களைப் போன்றோறின் பாராட்டுக்களின் வழி பெற்றேன் என்பதே உண்மை.

நன்றி நண்பரே.

சாமான்யன்

Post a Comment