Friday, March 27, 2009

உன்னையே நீ அறிவாய் ! (நான் யார்? நீ யார்? நாம் யார்?) - பாகம் 6

.

இந்த தொடரின் முதல் 5 பதிவுகளிலும் மலேசிய தமிழர்களான நாம் யார், எப்படி மலாயாவிற்கு வந்து சேர்ந்தோம், நமது குறிகிய கால சரித்திர பின்னனி என்ன, மற்ற இனங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நம்மிடையே எல்லா நிலைகளிலும் வளர்ச்சி குன்றியிருக்க காரணங்கள் என்ன, சாதியம் எனும் சாபம் நமது சமூகத்தை எப்படி பாதித்திருக்கின்றது, நமக்கும் மற்ற மலேசிய இனங்களுக்கும் (குறிப்பாக சீனர்களுக்கும்) இடையே உள்ள அடிப்படை கூறுகளின் வித்தியாசங்கள் என்னென்ன என்பதை எல்லாம் விரிவாக அலசி ஆராய்ந்து பார்த்தாகி விட்டது.


மேலும் விரிவாக நம் இனத்திடம் உள்ள நிலைப் பாடுகளையும், குறை பாடுகளையும் படம் போட்டு காட்ட நிறைய விஷயங்கள் இருந்த போதிலும், "இதற்கு மேல் இவர்களை தலையில் தட்டி எழுதுவதால் என்ன ஆகப் போகிறது? சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். குருடனை ராஜ முழி முழிக்கச் சொன்னால், அவன் எப்படி முழிப்பான்?" என்கிற சளிப்பு ஒரு புறம் என் மனதை ஆட் கொண்டு விட்டது.

அத்தோடு "மாற்றம் என்பது ஒரு மனிதனின் சுய சிந்தனையின் வெளிப் பாட்டாய் அமையும் போது தான் அது நிறந்தரமானதாக இருக்குமே ஒலிய, யாரோ பிற ஒருவர் சொல்லி மற்றொருவர் மாறுவது என்பது நடமுறையில் எடுபடாத ஒன்று. மிஞ்சிப் போனால் அப்படி ஏற்படும் மாற்றம் ஒரு பலமற்ற, தற்காலிக மாற்றமாகத் தான் இருக்க முடியும்" என்பது என்னுடைய ஆழமான கருத்தும் கூட.

ஆதலால், நம் சமூகத்தை பற்றிய என் அப்பட்ட விமர்சனங்களை இத்தோடு நிறுத்திக் கொண்டு, "மலேசிய தமிழ்ச் சமுதாயம் முன்னேற என்ன வழி?" என்கிற அடிப்படை கேள்விக்கு என் சுய புத்திக் கெட்டிய வழிவகைகளை இந்த பதிவில் இருந்து கொடுக்க நினைத்து எழுதத் துவங்குகிறேன். என் சிந்தனைகள் உங்களுக்கு பிரயோஜன படுகிறதா என்று படித்து பாருங்கள்.

நம்மை பிற்றி பிற இனங்களின் கண்ணோட்டம்

நாம் பிற எந்த ஆராய்ச்சியையும் ஆரம்பிப்பதற்கு முன்பு, முதல் வேலையாக மலேசியாவில் உள்ள பிற இனங்கள் 'மலேசிய இந்தியன்' என்பவனை என்ன கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறார்கள் என்பதை சற்று கவனித்தில் எடுத்து கொள்வோம். எனக்கு தெரிந்த வகையில் மலேசியாவில் உள்ள பிற இனத்தவர்கள் இங்குள்ள இந்தியர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்கிறார்கள்:-

""சீக்கியர்கள், வட இந்தியர்கள், மலையாளிகள் என்று சிறிது சிவப்பு நிறம் கொண்டவர்களோடு, யாழ்பானத்தினரையும் சேர்த்து இவர்களெல்லாம் முன்னேற்றமான இந்திய வகுப்பினர் என்றும், சிறிது கருமை நிறம் களந்த பிற யாவரையும் இந்தியர்களில் பிற்ப்போக்கானவர்கள்"" என்றும் தான் பார்க்கிறார்கள். இதுதான் நடைமுறையில் நான் அறிந்த உண்மை.

இப்படி பிற இனங்கள் நினைப்பதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்தால். "ஆம், அவர்கள் நினைப்பது உண்மைதான்" என்றே சொல்ல தோன்றுகிறது. "ஏன்? எப்படி? எதை வைத்து சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறீர்களா?

சரி இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் ஆராய முற்படுமுன், மலேசிய இந்தியர்கள் என்பவர்களை உள்ளடக்கிய ஒவ்வொரு இனத்தின் தற்போதைய நிலைப் பாட்டையும் தனித் தனியாக பார்ப்போம்:-

1). சீக்கியர்கள்

மலேசியாவில் சீக்கிய இனத்தின் எண்ணிக்கை ஒரு 70,000 இருக்கும். இவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிட்டீஸ்காரர்களால், சிப்பாய்களாகவும், போலீஸ்காரர்களாகவும் மலாயாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள். உழைப்பிற்கும், ஒழுக்கத்திற்கும், மனத் திடத்திற்கும், வைராக்கியத்திற்கும் பேர் போனவர்கள்.

இனவாரியாக சீக்கியர்களின் சாதனைகளை எடை போட்டு பார்த்தால், இவர்கள் தான் மலேசியாவில் உள்ள இனங்களிலேயே அதி முன்னேற்றமான, பணக்கார இனமாக இருப்பார்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? நீங்கள் எங்காவது ஒரு சீக்கியர் அடுத்தவருக்கு கூலி வேலை செய்து பார்த்து இருக்கிறீர்களா? இல்லை, எங்காவது ஒரு சீக்கிய பிச்சைக்காரரை பார்த்து இருக்கிறீர்களா? இல்லை, அன்றாட அலவல்களில் பலதரப் பட்ட இனாங்களோடு பலகும் போது எப்போதாவது ஒரு சீக்கியர் எந்த காரணத்திற்காகவும் அடுத்தவருக்கு பயந்து பின்வாங்குவதை பார்த்திருக்கிறீர்களா?

("இனவாரியாக பார்த்தால், சிங்கப்பூரில் அதிக சராசரி வருமான வரி கட்டுபவர்கள் சீக்கிய இனத்தவர்கள் தான்" என்று சிங்கப்பூரின் முன்னால் பிறதமர் திரு. லீ குவான் யூ ஒரு முறை தேர்தல் மேடையில் சொல்லியதை நானே கேட்டிருக்கிறேன்).

2). வட இந்தியர்கள்

மலேசியாவில் வட இந்திய இனங்களான குஜராத்தி, சிந்தி, பங்காளி பொன்ற இனங்களின் மொத்த ஜனத்தொகை ஒரு 10,000 இருக்கும். இவர்கள் வட இந்தியாவில் இருந்து வர்த்தகர்களாக அந்தக் கால மலாயாவிற்கு வந்தவர்கள். இன்றும் இவர்களின் சந்ததியினர் பெரும்பாலும் வர்த்தகர்களாக தான் இருந்து வருகிறார்கள். நிறுவையில் வைத்து எடை போட்டு பார்த்தால், இவர்களும் படிப்பாலும், பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கை தரத்தாலும் மிகவும் மேம்பட்ட, மலேசியாவின் பிற எல்லா இனங்களையும் தூக்கி விழுங்க கூடிய ஒரு சமூகத்தினர் தான்.

3). மலையாளிகள்

மலேசியாவில் மலையாளிகளின் ஜனத்தொகை ஒரு 120,000 இருக்கும் என்பது என்னுடைய பல மலையாள நண்பர்களின் மதிப்பீடு. அந்த கால மலாயாவிற்கு மலையாளிகள் பிரிட்டீஸ்காரர்களால் ரப்பர் தோட்ட நிர்வாகத்தினருக்கு குமாஸ்தாக்களாகவும், மண்டோர்களாகவும், மருத்துவ உதவியாளர்களாகவும் கொண்டு வரப் பட்டுள்ளாகள். இங்கு வந்த தமிழர்களைப் போல் அல்லாமல், மலையாளிகள் சுமார் எண்பது, தொன்னூறு வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டிற்கு வரும்போதே படித்தவர்களாகவும், நன்கு ஆங்கிலம் பேச, படிக்க, எழுதத் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

நாளடைவில், இவர்களின் சந்ததியினரும், நன்கு படித்து பட்டம் வாங்கியவர்களாக அமைந்ததால் இவர்களுக்கு மலேசிய தமிழரைப் போன்ற அடிப்படை பிர்ச்சனைகள் எல்லாம் என்றுமே இருந்ததில்லை. அத்தோடு, பிறரை கவரும் வகையில் இவர்களுடைய நிறமும் சிவப்பாக இருந்தது இவர்களுக்கு மற்றுமொரு பெரிய அனுகூலமாக என்றுமே இருந்துள்ளது.

மலையாளிகள் பொதுவாக வர்த்தகம், தொழில் என்பவையில் ஈடுபடாதவர்களாக இருந்துள்ள படியால், இந்த சமூகத்தில் குறிப்பிட தக்க அளவில் பெரும் பணக்காரர்கள் உருவாகமல் இருந்திருக்கிறார்கள் என்கிற உண்மை ஒரு புறம் இருந்தாலும், மலையாளிகள் காலங்காலமாக படிப்பிற்கு கொடுத்து வந்துள்ள முக்கியத்துவம் நாம் யாவரும் நன்கு அறிந்த ஒன்று. அந்த வகையில் படிப்பிற்கு முன்னுரிமை கொடுத்ததின் வழி, தங்கள் வாழ்க்கை தறத்தை மேம்படுத்தி கொண்ட இனங்களுல், மலையாளிகள் முதல் நிலை பெற்றவர்கள்.

4). யாழ்பானத் தமிழர்கள்

மலேசிய ஜனத்தொகையில் யாழ்பானத் தமிழர்கள் ஒரு 150,000 பேர் இருப்பார்கள் என்பது என்னுடைய மதிப்பீடு. இவர்களும் மலேசியாவில் உள்ள பிற எல்லா இனத்தையும் தூக்கி விழுங்க கூடிய ஒரு இனத்தவர்தான். மலேசியாவின் அதி பெரிய பணக்காரர்களில் திரு. ஆனந்த கிருஷ்ணன், டத்தோ ஞானலிங்கம், டான் ஸ்ரி ஆறுமுகம் போன்று எத்தனையோ யாழ்பானத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் எந்த இனத்திடம் சராசரி அதிக சொத்துக்கள் இருக்கின்றது என்பதை கணக்கெடுத்து பார்த்தால் அது நிச்சயமாக யாழ்பான தமிழர்கள் இனமாகத் தான் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மலாயாவைப் போல் 43 நாடுகளை தங்களின் காலனிகளாக கொண்ட பிரிட்டீஸ் அரசாங்கத்தினர், மலாயாவின் தட்ப்ப வெட்ப சூழ்நிலையில் ரப்பர் மரம் நன்றாக வளரும் என்பதை உணர்ந்த போது, 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் மற்ற பல காலனித்துவ நாடுகளை விட மலாயாவின் பால் அதிக நாட்டம் காட்ட துவங்கினர்.

அந்த வகையில் மலாயாவில் காடுகளை அழித்து, ரப்பர் மரங்களை நட்டு வளர்க்க மிகவும் பொருத்தமானவர்கள் என்று படிப்பறிவு இல்லாத இந்திய தமிழர்களையும், அரசாங்க நிர்வாகத்திற்கு பொருத்தமானவர்களாக படித்த யாழ்பான தமிழர்களையும் அடையாளம் கண்டு, இந்த இரு தமிழ் பிரிவினரையும் மலாயாவிற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்தனர்.

இப்படி யாழ்பானத்தில் இருந்து வந்த தமிழர்கள் பெரும்பாலும் சாதியத்தில் மேம்பட்ட அள்ளது நடுத்தர இனங்களைச் சேர்ந்தவர்களாகவும், நன்கு படித்தவர்களாகவும், ஆங்கிலத்தை சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

அத்தோடு அந்த கால சூழ்நிலையில், ஒரு வளர்ந்து வரும் செழிப்பு நிரைந்த புது நாட்டில் ஆங்கில நிர்வாகிகளுக்கு துணையாளர்களாக, குமாஸ்தாக்களாக, சர்வேயர்களாக, மருத்துவ உதவியாளர்களாக, ஆசிரியர்களாக, தொழில் நுட்ப உதவியாளர்களாக அரசாங்க சேவையில் யாழ்பான தமிழர்கள் செயல்பட்ட போது, இயல்பாக அந்த பதவிகளில் யாருக்கும் கிடைக்க கூடிய பல அனுகூலங்கள் அவர்களுக்கும் கிடைத்துள்ளன. அப்படி கிடைத்த அனுகூலங்களை யால்பான தமிழர்கள் திறம்பட பயன்படுத்திக் கொண்டு, நன்மை அடைந்திருக்கிறார்கள்.

அரசாங்கத்தில் என்னென்ன வேலைகள் காலியாக உள்ளன, எப்போது அந்த இடங்கள் நிரப்ப பட உள்ளன, அதற்கான நேர்கானல், தேர்வு எல்லாம் எப்போது நடத்த பட உள்ளது, யாரால் நடத்தப் பட உள்ளது என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் முதலில் தெரிய வருவது அங்கு வேலை செய்யும் இவர்களுக்கு தான். அதை சாதகமாக பயன் படுத்தி, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என்று சங்கிலித் தொடர் போல் அவர்களுக்கு தெரிந்தவர்களாக அரசாங்க உத்தியோகத்தில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். இப்படி அரசாங்கத்தில் யாழ்பான தமிழர்களுக்கு இருந்த சொகுசு நிலை, 1969 வருடம் நடந்த இனக் கலவரத்திற்கு பிறகு முன் வைக்க பட்ட புதிய பொருளாதார கொள்கையின் அமுலாக்கத்திற்கு பிறகே முற்றுக்கு வந்துள்ளது.

ஆனாலும் 1969 ஆம் ஆண்டிற்க்கு 100 வருடங்களுக்கு முன்பு வரை யாழ்பான தமிழர்களுக்கு அரசாங்கத்தில் இருந்த சலுகைகளின் மூலம் தங்கள் இனத்திற்க்கு ஏற்படுத்திக் கொண்ட பலம் (வலம்) மிகப் பெரியது. அந்த நிலைப் பாட்டின் தாக்கம் இன்றும் அவர்களுக்கு துணை நிற்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

யாழ்பானத்தாரின் பலத்தை, வளர்ச்சியை சரியாக புரிந்து கொள்ளும் முன், வாசகர்கள் அவர்களைப் பற்றிய மற்றொரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும். யாழ்பானத் தமிழர்களிடையே பெண் குழந்தைகளுக்கு அதிகமான வரதட்சனை கொடுத்து மணம் முடித்து வைப்பது என்பது காலங்காலமாக பின்பற்றப் பட்டு வந்துள்ள ஒரு சமூக வளக்கம். அதனால், ஒவ்வொரு யாழ்பான தமிழரும் தம் பெண் பிள்ளைகளின் வரதட்சனைக்கு பிற்பாடு தேவைப் படும் என்பதற்காக தங்களின் சேமிப்புகளை அன்றைய மலாயாவில் 'நில பலங்களில்' முதலீடு செய்துள்ளார்கள். அன்று அப்படி வாங்க பட்ட நில பலங்கள்தான் பிற்பாடு யாழ்பான தமிழ் பிள்ளைகளின் வெளிநாட்டு படிப்பிற்கும், அவர்களின் தொழில் முயற்ச்சிகளுக்கும், பிற முக்கிய செலவுகளுக்கும் பயன் படுத்தப் பட்டுள்ளன.

இதன் தாக்கத்தை வாசகர்கள் முறையாக புரிந்து கொள்ளவதற்கு ஏதுவாக, உங்களுக்கு இங்கு ஒரு எடுத்து காட்டை முன் வைக்கிறேன். கோலாலம்பூரில் 'பங்சார்' என்று ஒரு இடம் உள்ளது. இந்த 'பங்சார்' எனும் பகுதிதான் மலேசியாவிலேயே அதிக விலையுள்ள நடுத்தர வீடுகளை கொண்ட இடம். இங்கு ஒரு ஒற்றை மாடி ட்டெரஸ் வீட்டின் இன்றைய விலை மலேசிய ரிங்கிட் 600,000 ஐ தாண்டி ஓடிக் கொண்டுள்ளது. இந்த பங்சாரில் உள்ள சுமார் 2,000 வீடுகளில் எப்படியும் ஒரு 30 விழுக்காடு வீடுகள் இன்றும் யாழ்பான தமிழர்களுடையதாக தான் இருக்கின்றன. 1970 ஆம் ஆண்டு இந்த வீடுகள் கட்டி முடிக்க பட்ட போது யாழ்பானத்தார்கள் தான் வலைத்து. வலைத்து இந்த வீடுகளை ஓரு வீடு மலேசிய ரிங்கிட் 14,000 என்ற விலைக்கு வாங்கினார்கள். இன்று அதே வீடுகளின் விலை மலேசிய ரிங்கிட் ஆறு லட்ச்சம். எனக்கு தெரிந்த பல யாழ்பானத் தமிழர்கள் பங்சாரில் இன்றும் இரண்டு, மூன்று வீடுகள் வைத்திருக்கின்றனர்.

இதே போல் வீடு, வாசல், நிலம் புலம், எஸ்டேட்டுகள் என்று மலேசியாவில் யாழ்பானத்தார்கள் வாழ்ந்த பல நகரங்களில் இன்றும் அவர்களுக்கு சொத்து சுகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

5). தெலுங்கர்கள்

மலேசியாவில் உள்ள தெலுங்கர்களை பற்றி எனக்கு தனி மனித அளவில் எந்த அநுபவமும் இருந்தது இல்லை. அதனால் அவர்களை பற்றி எதுவுமே தெரியாத நிலையில் இனையத்தில் மலேசிய தெலுங்கர்கள் குறித்து என்ன சொல்லப் பட்டிருக்கிறது எனப்தை கண்டு பிடிக்க பல இணைய தலங்களை எட்டி பார்த்தேன். மலேசிய ஆந்திரா அசோசியேஷனின் இணைய தலத்தில் மலேசியாவில் தெலுங்கர்களின் ஜனத்தொகை 300,000 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சரிதானா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சரி மலேசியாவில் தெலுங்கு இனத்தினரின் ஜனத்தொகை எவ்வளவு என்கிற கேள்வியை இங்கு விட்டு விடுவோம். நான் கண்டு பிடித்த வரை, தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழர்களைப் போல், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கர்களும் எந்த படிப்பறிவும் இல்லாத நிலையில் மலாயாவிற்கு கூலி வேலை செய்வதற்காக வந்தவர்கள் தான். ஆனால், தமிழர்களை விட மலேசியாவில் உள்ள தெலுங்கு இனத்தவர் மேம்பட்ட பொருளாதார நிலையிலும், கூடுதலான படிப்பறிவோடும் உள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

யாழ்பானத்து தமிழர்களை போல், தெலுங்கர்களும் 1960 - 1970 களில் நில பலங்களில் அதிகமாக முதலீடு செய்திருக்கிறார்கள். குறிப்பாக தோட்ட துண்டாடல் நடந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான தெலுங்கர்கள் அவர் அவர்களால் முடிந்த அளவு நிலங்களை வாங்கி போட்டிருக்கிறார்கள். அப்படி வாங்கி போடப் பட்ட நிலங்களின் விலை இன்று ஒன்றுக்கு, பத்து, இருபது என்கிற நிலையில் உள்ளன.

அப்படியானால் மலேசிய தெலுங்கர்களும் நம்மை விட (மலேசிய தமிழர்களான நம்மை விட) விவரமான, முன்னேற்றமான இனத்தினர் தானே.

6). இந்திய முஸ்லீம்கள்

மலேசியாவில் இந்திய முஸ்லீம்களின் ஜனத்தொகை ஒரு 150,000 இருக்கலாம் என்பது என் கணிப்பு. நாட்டுக் கோட்டை செட்டியார்கள் இனத்தை போல், வட இந்திய இனங்களைப் போல் தமிழ் நாடு, கேரளா ஆகிய இந்திய மாநிலங்களில் இருந்து மலாயாவிற்கு வணிகர்களாக வந்தவர்கள் தான் இன்றைய இந்திய முஸ்லீம்கள்.

பொதுவாக படிப்பில் அதிகம் கவனம் செலுத்தாத ஒன்றுதான், இந்த இனத்தவரை பற்றி யாரும் குறையாக சொல்லக் கூடிய ஒரே விஷயம். அதுவும் இப்போதைய நிலையில் மாறிக் கொண்டு வருகிறது. மற்ற வகையில் இந்திய முஸ்லீம்கள் வணிகத்திலும், வியாபாரத்திலும் அசாத்திய அசுரர்கள்.

சீனர்களை ஒத்த உழைக்கும் தன்மை இவர்களுக்கும் வெகுவாக உண்டு. பொருளாதார ரீதியாக மிகவும் மேம்பட்ட ஒரு வகுப்பினர். ஆனால், மற்றவரைப் போல இவர்களிடம் இருக்கும் பொருள் வலம் இலகுவில் வெளியில் தெரியாத வகையில் வாழ்க்கையை சாதாரணமாக நடத்திச் செல்லும் இயல்பு உள்ளவர்கள்.

7). இந்திய தமிழர்கள்

இந்திய தமிழர்கள் (ஆம்.... நாம்) இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து 150 வருடங்களுக்கு முன்பு ரப்பர் எஸ்டேட்டுகளில் வேலை செய்வதற்காக பிரிட்டீஸ்காரர்களால் கொத்தடிமைகளாக, கங்கானி ஏஜண்டுகள் மூலமாக மலாயாவிற்கு கொண்டு வரப் பட்டவர்கள்.

இவர்கள் மலேசிய இந்திய ஜனத்தொகையில் 75 விழுக்காடு இருப்பார்கள் என்பது பலரது கணிப்பு. படிப்பறிவு சிறிதும் இல்லாத நிலையில், கூலி வேலைக்கென்றே இந்த நாட்டுக்கு கொண்டு வரப் பட்ட இனத்தினர்.

மலேசிய இந்திய இனங்களிலேயே படிப்பு, பொருளாதாரம், சமூக இயல் என்று எல்லா வகையிலும் பிற எல்லா இனங்களையும் விட பொதுவாக பின் தங்கிய நிலையிலேயே இன்றும் இருந்து வரும் ஒரு சமூகத்தினர்.

ஆக இதுதான் மலேசிய இந்தியன் எனும் குழுமத்தின் உள்ள எல்லா இனங்களின் இன்றைய நிலைப் பாடு. இதில் எல்லா இனங்களையும் விட கடைசி வரிசையில் இருப்பது நாம் தான்.

சரி, இப்படி இனவாரியான ஆராய்ச்சி எதற்கு என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. அடுத்த பதிவில் காரணங்களை பார்ப்போம்.

14 comments:

Sathis Kumar said...

சமூக விகிதாச்சாரமும், அவரவர்களின் அடைவுநிலைகளையும், அதற்கான காரண காரணியங்களையும் நன்கு அலசியுள்ளீர்கள். மேலும் பல தகவல்கள் கொண்ட அடுத்த பதிவினை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.

சாமான்யன் said...

வாருங்கள் சதீசு குமார்,

"என்னய்யா, கடைசி பதிவு பதிப்பிக்கப் பட்டு 10 நாட்கள் ஆகின்றன, இன்னமும் உங்களின் அடுத்த பதிவை காணோமே!?" என்று கேட்க நினைத்து, அதை பாலிசாக ஞாபகப் படுத்தி விட்டு சென்ற உங்களின் நல்ல மனசிற்கு எனது நன்றி.

விரைவில் அடுத்த பதிவை பதிப்பிக்கிறேன். சில சமயங்களில் நமது மூலையில் பின்னிப் பினைந்து கிடக்கும் பல தரப்பட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும் வகைப் படுத்தி, நாம் மனதில் என்ன நினைக்கிறோம் என்பதை நமது அளவில் முறையாக நாம் புரிந்து கொள்வதே பெரும் பிரச்சனையாக உள்ளது.

இருந்தாலும், என் சுய சிந்தனைப் பிரச்சனை எல்லாவற்றையும் சீர்படுத்தி, என் ஆழ் மனதில் தேங்கி நிற்கும் எண்ண உறுத்தல்களுக்கு வடிவம் கொடுத்து, படிப்பவர் புரிந்து கொள்ளூம் வகையிலான என் அடுத்த பதிவை விரைவில் எழுதுகிறேன்.

இது எனக்கு ஒன்றும் புதுக் குழப்பம் அல்ல. நான் எதை எழுத உட்கார்ந்தாலும், இந்த குழப்ப நிலை என் பக்கத்திலேயே தானும் ஒரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து விடும்.

சிறிது நாள் அவகாசம் கொடுங்கள். உங்கள் எதிப் பார்ப்பை மிஞ்சிய ஒரு பதிவை கொடுக்கிறேன்.

சாமான்யன்

shivkanggai said...

taamatamaga vantu paditaalum kaalatodu paditu vidden . paguti 6 - malayia indiargalil ivvalavu verupaadugalai naangal palar arintirukka villai. ellaarum tamilar enru ninaitu viddom .ippadi padda tagavalgalai niraiya sollungal. ennaipol palar kaalam kadantu paditaalum sariyaana vaaippin potu paditu viduvaargal , tevai padumpotu payanpadutium kolvaargal . unmai ellutuku enrum sakti atigam .
sorvillaamal elutungal. matra pagutigalai piragu kandippaga padippen . ippolutu kan valikkiratu .nanri

சாமான்யன் said...

வாருங்கள் சிவகங்கை,

தாங்கள் இங்கு வந்து என் பதிவுகளை படிப்பது குறித்து எனக்கு மிகுந்த சந்தோஷம்.

ஒரு வேண்டுகோள். மீதி உள்ள ஆறு பதிவுகளையும் முதல் பதிவில் இருந்து ஆரம்பித்து படிக்கும்படி கேட்டு கோள்கிறேன். காரணம் இந்த தொடரில் உள்ள என் எழுத்தின் தன்மையை புறிந்து கொள்ள தாங்கள் முதல் இரு பதிவுகளையும் முதலில் படித்திருக்க வேண்டும்.

shivkanggai said...

1-5 bagutigalaiyum, mutal pagutiyil iruntu ippotutaan paditu muditen . paguti 1- saatiyam , paguti 2 - kaalil vilum visayam , paguti - 3, 4, 5 seenar visayam .. ellaame unmaigal .

ellame unmai enumpotu , etho sila satiyangkalai avai sumantu irukkinrana enru taangal unarnte ellutukireergal enru en aall manam nambukiratu.

taai oruti pillaiyai adipatan nokkam , valiyai etpaduta vendum enbataagavaa irukkum ?

சாமான்யன் said...

சிவகங்கை,

நான் என் பதிவுகளின் மூலம் மலேசிய தமிழ் இனத்தை சாடு, சாடேன்று சாடுவதற்கு காரணம் யாரையும் காயப் படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.

காலம் நம் இனத்தை தாண்டி மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் நம் தூக்கத்தில் இருந்து விழிக்காவிட்டால், நாம் இப்போது உள்ள நிலையை விட மிகவும் பின் தங்கிய ஒரு இனமாக நிச்சயம் ஆகிவிடுவோம்.

ஏதோ, சாட்டையால் அடித்தால் போல் எழுதுவதனால் என் எழுத்துக்களை படிக்கும் பத்து பேரில் ஒரு இரண்டு தமிழர்களின் சிந்தனையையாவது நான் தூண்டி விட முடியுமா என்று பார்க்கிறேன். அவ்வளவுதான்.

எனது சாட்டை அடி எழுத்துக்களுக்கான காரணமே ஆழ்ந்த சமுதாய உணர்வுதான். இல்லையென்றால், எல்லோரைப் போலவும் பாலிசாக, பாட்டி வடை சுட்ட கதை, இதிகாசங்கள் அதைச் சொன்னன, வள்ளுவர் இதை சொன்னார் என்று எதையாவது பொழுது போக்கிற்காக எழுதி விட்டு என் பாட்டுக்கு என் ஜோலியை பார்த்து கொண்டு போய் கொண்டே இருப்பேன்.

shivkanggai said...

சாமான்யரே

தாமதமாக தமிழில் டைப் அடிக்க கற்றுக் கொண்டாலும் காலத்தோடு கற்றுக் கொண்டு விட்டேன் பார்த்தீர்களா . என்னை இப்படி தமிழில் அடிக்க தூண்டியது தங்கள் எழுதில் காணப்பட்ட உணர்வுகள்தான் . அந்த உணர்வுகளுக்கு நன்றி.

வாருங்கள் என்று ஒவ்வொருவரையும் அழைக்கும் அந்த சின்ன அன்புதான் விடாமல் படிக்க தூண்டுகிறது . சின்ன சின்ன அன்புகளுக்கு குழந்தைகள் , வளர்ப்பு பிராணிகள் மட்டும் அல்ல கல்லும் , பாறையும் கூட பதில் கொடுக்கும் . அதனால் தான் ஈரம் கொண்ட பச்சை வேர் தன்னை ஊடுருவ அவை அனுமதிக்கிறது . அது போல் தான் தமிழர் . அவரை அவராகதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் . மிக ஆதியான ரொம்ப பழையவர்கள் நம் தமிழர் . கல்லும் பாறையும் போன்றவர்கள். இயற்கை வாழ்க்கை முறையானவர். நவீன வாழ்க்கை முறை மெல்ல மெல்ல வருவதும் நல்லது . இப்போது பாருங்கள் , நானும் தமிழில்
அடிக்க கற்றுக் கொண்டேன் . தங்கள் போன்றோர் முயற்சி வீண் போகாது . இன்னும் எழுதுங்கள்.

சாமான்யன் said...

வாருங்கள் சிவகங்கையாரே,

சிவகங்கைச் சீமையின் மண்வாசத்தோடு, அதன் ஆழ் உணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் தங்கள் முதல் தமிழ் எழுத்து இருக்கிறது.

தங்களைப் போன்றோரை பார்க்கும்போது என் மனதில் ஒரு இயல்பான ஈர்ப்பு எப்பொழுதும் எழும்பும். இப்போது தங்களை பார்க்கும்போதும் அந்த ஈர்ப்பு அரும்புகிறது.

தாங்கள் மேலே எழுதியிருப்பதை நம் கலாச்சாரத்தில் தோய்த்தெடுத்த ஒரு பழமைவாதியினால் மட்டும் தான் எழுத முடியும். தங்களைப் போல் நம் இனத்தின் தன்மையை நானும் உணராமல் இல்லை, ஆனால் நான் நம் பழமையோடு நமது இன்றைய நிலைமையையும் சேர்த்தே பார்க்கிறேன்.

ஒரு மேன்மையான கலாச்சாரம் என்பது மாறி வரும் உலகத்தின் எல்லா சூழ்நிலைகளிலும் அதன் அங்கத்தினனுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும். அப்படி அது இருந்தால் மட்டும் தான் அதை ஒரு மேம்பட்ட கலாச்சாரம் என்று நாம் ஒத்துக் கொள்ள முடியும்.

கூட்டி கழித்து பார்த்தால், நமது கலாச்சாரத்தின் எல்லா மேன்மையான அம்சங்களும், அதோடு ஒட்டி உருவாகிய சாதியம் எனும் சாபத்தின் இயல்பால், தாக்கத்தால் கறைபட்டு போய் இருக்கின்றன. அதுதான் உண்மை.

shivkanggai said...

'நமது கலாச்சாரத்தின் எல்லா மேன்மையான அம்சங்களும் ........'
எனும் தங்கள் சொல் ஒன்று போதும் .

சாமான்யரே,

நம் தமிழர் மேன்மையானவர். ஆடை அலங்காரம் ஒப்பனைக் கலை , ஆடல் பாடல் இசை சங்கீதம் நடனம் நாடகம் கலை கற்பனை காவியம் கதை கவிதை திரம் & திறம் , வள்ளுவம் காட்டும் காதல் கற்பு காமம் வாழ்க்கை நெறி , அறு சுவையாகிய கரிப்பு உறைப்பு கசப்பு புளிப்பு இனிப்பு துவர்ப்பு உணவு சுகம் , மருத்துவம் கண்டவர்கள் மட்டும் அல்ல தமிழர்கள் ... அதனை உலகிற்கு வழங்கியவர்கள் . இவ்வுலக வாழ்க்கை மட்டுமல்லாது அவ்வுலக வாழ்க்கையின் அருளும் பக்தியும் முக்தி நெறியும் உலகிற்கு ஈந்தவர் தமிழர். நகைநட்டு ஆபரணம் செய்தவர் தமிழர் . மோகஞ்ஜோதரோ ஹரப்பா கட்டட கலை பட்டண கலை உருவாக்கியவர்கள் தமிழர் . நமது சிற்பிகளும் அவரது சிற்பங்களும் கோயில்களும் எதற்கு ஈடு ? . காலத்தை வென்று வாழும் தமிழையும் அந்த மொழியின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கண்டவர்கள் தமிழர் , கல்வியும் திண்ணை பள்ளியும் சங்கமும் இல்லாதவர்களா தமிழர் . அரசியல் போர் படை வீரம் விளையாட்டு கண்டவர் தமிழர் . எல்லாம் கண்டவர் தமிழர் என்று தெரிந்தும் பாரதி வீறு கொண்டு அன்று கலங்கினான் , அவர் போலவே தாங்கள் தமிழர் மேன்மையெல்லாம் தெரிந்தும் தமிழர் இயலாமைகள் அடாவடிதனங்கள் நினைத்து இன்று கலங்குகிறீர்கள்... தாங்கள் யார் ? .

சாமான்யன் said...

வாருங்கள் சிவகங்கையாரே,

நான் தாண்டி வந்த கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளில் நான் படித்த பாடங்களினாலும், பயணித்து வந்த நாடுகளில் பார்த்த ஜனங்களினாலும், பலகிய என்னற்ற இனங்களிடம் கண்ட தன்மையினாலும் பிற போதுவான தமிழர்களை விட எனது பார்வை என்றுமே சிறிது வித்தியாசமாத் தான் இருந்திருக்ன்றது. என்றென்றும் இருக்கும்.

சிவகங்கையாரே, தமிழ் இனத்திடம் பலவற்றும் இருக்கலாம். "கல் தோன்றி மண் தோற்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியாக" தமிழ் இனம் இருந்திருக்கலாம். ஆனால் கேள்வி என்னவென்றால், அந்த குடியில் மலேசிய தமிழர்களின் பாட்டன் பூட்டன்கள் எல்லாம் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதுதான்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட எத்தனையோ இதிகாசங்களும், வள்ளுவமும், கல்விக் கழஞ்சியங்களும் நம்மிடையே இருந்தும், நாம் எழுதப் படிக்க கற்று கொண்டது ஒரு நூற்று ஐம்பது வருட இடைவேளைக்குள் தான்.

பச்சையாக சொன்னால் "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த குடியில்" மலேசிய தமிழர்களின் முப்பாட்டன்கள் பிறருக்கு கக்கூஸ் கழுவிவிடும் நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். இது தான் அப்பட்டமான, அலுத்தம் திருத்தமான, அசைக்க முடியாத உண்மை.

நம்மை நாம் உண்மையிலேயே மேம்படுத்த வேண்டுமானால், முதலில் உண்மைகளை உண்மை என்று ஏற்று கொள்ள வேண்டும். இரண்டாவதாக, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை போலித்தனம் இல்லாமல் அப்பட்டமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

நான் யார் என்று கேட்டுள்ளீர்கள். இது எதற்கு நண்பரே? சாமான்யன் என்றென்றும் சாமான்யனாகவே இருக்க விரும்புகிறேன். அதோடு அனாமதேயமாக இருப்பதில் ஒரு மிகப் பெரிய சுதந்திரம் இருக்கின்றது. அதை இழக்க நான் விரும்பவில்லை.

"உணர்ச்சி என்பது வேண்டும்" என்று பாரதி பாடிச் சென்றது போல் நம் இருவருக்குமே உணர்ச்சி பிழம்பு சிறிது அதிகமாகவே இருக்கிறது. என்ன, அதன் வெளிப்பாடுதான் சிறிது வேறுபட்டுள்ளது.

shivkanggai said...

http://3.bp.blogspot.com/_M9HOVM16ESM/SjHImXMKsuI/AAAAAAAAADs/ZQKDYTqfnYM/s1600/bharathi.jpg

சாமான்யன் said...

வாருங்கள் சிவகங்கையாரே,

கோப படுவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. மலேசியத் தமிழனால் புத்தியை உபயோகிக்க முடியாது போனதுதான் நம் பிரச்சனைகளுல் எல்லாம் பெரிய பிரச்சனை.

நம்மை சுற்றி உள்ள சூழ்நிலையைப் பாருங்கள். நாமும் கூலிகளாகத் தான் இந்த நாட்டிற்கு வந்தோம். சீனர்களும் கூலிகளாகத் தான் இங்கு வந்தார்கள். இன்று தமிழ் இனம் இங்கு நலிந்து, மெலிந்து, கேட்பாரற்ற ஒரு பரிதாபக் கூட்டமாக காட்சி அளிக்கிறோம். ஆனால் சீனர்களோ, பறந்து விரிந்து, சிறந்து, 'நாங்கள் உலகில் உள்ள எவருக்கும் சலைத்தவர்கள் அல்ல' என்று மார் தட்டும் விதத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் ரீதியாக, இன ரீதியாக, விஷமம் செய்யாது யாரும் அவர்களை தடுத்து, இழுத்து, நிறுத்தாமல் விட்டால் இந்த நாட்டு சீனர்களால் எந்த அளவு சாதனைகள் செய்ய முடியும் என்பதற்கு அப்பட்டமான சான்று மலேசியாவில் இருந்து பிரிந்து சென்று இன்று அவர்கள் சிங்கப்பூரை ஆட்சி புரியும் முறைதான்.

நாமும் அவர்களைப் போல்தானே இங்கு வந்தோம். நமக்கு மட்டும் ஏன் இந்த அவலம் ??? இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் என்ன என்று கண்டு பிடிக்க விலைந்தாலே, நமது வண்டவாளம் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்து விடும்.

ஆனால் பாருங்கள், உண்மை என்ன என்பதை ஆழமாக ஆராய்ந்து தெளிவு பெருவதைவிட நாம் வெத்து சவுண்டு விடுவதில்தான் மும்முரம் காண்பிப்போம். ஏன் அப்படி? இதை நான் தமிழ் தெரிந்த ஒரு மறத் தமிழரிடம் கேட்டால் அவர் என்ன சொல்லுவார் என்று பார்ப்போம்:-


"கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி நாங்கள். சொல்லிக் கொடுக்கும் இனம் தமிழினம், நீர் சொல்லி கொடுக்க விழைவது அறிவீனம்".

அது சரி அய்யா. தாங்கள் ஏன் அழுக்கு வேஸ்டியும், அறை வயிருமாக காட்சி அழிக்கிறீர்கள்?! மத்த இனத்தவன் எல்லாம் செழிப்பா தெரியிரானுகளே?!

"டேய் !!....ஆய் !!...ஊய் !!.... இந்த கேள்வி எல்லாம் இங்கு கேட்காதே அப்பனே! நான் மறத் தமிழன், அஞ்சா நெஞ்சன். வீரன், தீரன், சூசூ..ர..ரன்.... ஆஆஆ !!.... துடிக்கிறது மீசை...".

மன்னித்து கொள்ளுங்கள் அய்யா, எனக்கு இப்போது நேரம் இல்லை. நானும் தமிழன் தான். என் பஸ் வந்திருச்சு. நேரத்தோடு போனேன் என்றால், ஏதோ நாலு காசு பாத்து புள்ளை குட்டியை காப்பாத்தலாம். இப்படியே தங்களோடு நின்று பேசிக் கொண்டு இருந்தேன் என்றால் எனக்கும் "டங்குனக்கா, டங்கானா தான்". வர்ரேன்.

xxxxxxx

நெஞ்சு பொருக்குதில்லையே, இந்த வடி கட்டிய முட்டாள் மலேசிய தமிழரை நினைத்து விட்டால் !!!!!

shivkanggai said...

சாமான்யரே,

தாங்கள் நிச்சயமாக நல்ல ஆத்மா . அந்த ஆத்மாவை தாங்கி இருக்கும் தங்கள் உடலும் அதன் செயல்களும் என்றென்றும் நல்லதாகவே தர்மம் தவறாது இருக்க என் போன்றோர் கரங்கள் எப்போதும் இறைவனை தொழுத வண்ணம் இருந்தே ஆக வேண்டும். எங்களை போன்றோர் நெகிழும் மனங்களும் அவர்தம் தொழுகை கரங்களும்
இறைவனால் கைவிடப்படுவதில்லை .

மழையின் வருகை பூமிக்கு அவசியம் , ஆனால் அது சூடாகவோ அல்லது கொதிப்பாகவோ வந்தால் என்னாவது . இடி மின்னல் எனும் பயங்கரங்களில் இருந்து புறப்பட்டு வந்தாலும் மழை தன்னிலை மாறாது , அதன் தன்மை தண்மை மட்டுமே . அது என்றுமே தன்னிலை இழக்காது . ஆனால் மாந்தர் நாம் அவ்வாறு அல்ல . நிலை கெட்ட மனிதரால் சூழப்படுகிறோம் , நிலை கெடுகிறோம் , பின் நிலை கெட்ட மனிதர் ஆகி விடுகிறோம் , நிலை கெட்ட மனிதரால் தான் உலகில் இவ்வளவு அவலங்கள் . அதிலும் தமிழர்போல் உலகில் நிலை இழந்த , நிலை கெட்ட இனம் வேருண்டா?. அதைதான் தங்கள் கட்டுரையை படித்தபோது நான் உணர்ந்தேன் .

(ஜா)சாதிக்கும் அப்பால் தமிழரின் நிலை இழக்கும் பண்பே இன்றைய எல்லா இழி நிலைக்கும் காரணம் என்று எழுத நினைக்கும் எனக்கு தற்போது களம் இல்லை . காலம் தாழ்த்தினாலும் காலத்தோடு தங்களைப் போன்றோரோடு வந்து விடுவேன் .

' நெஞ்சு பொறுக்குதில்லை , இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் ' என்ற பாரதி கூற்றை தங்கள் கட்டுரை
கருவாக சுமக்கிறது எனும் உணர்வோடு விடை பெறுகிறேன்.

சாமான்யன் said...

வாருங்கள் சிவகங்கையாரே,

//(ஜா)சாதிக்கும் அப்பால் தமிழரின் நிலை இழக்கும் பண்பே இன்றைய எல்லா இழி நிலைக்கும் காரணம் என்று எழுத நினைக்கும் எனக்கு தற்போது களம் இல்லை// என்று எழுதி உள்ளீர்கள்.

உலகில் மற்ற எந்த சமூகத்திலும் இல்லாத ஒரு பண்டைய சமூகவியல் அம்சம் நம்மிடையே இருக்கும் சாதி எனும் சாபம். இதைப் பற்றி பேசுவது அநாகரீகமாக ஆகிவிட்ட சூழ்நிலையில், நம்மிடையே உள்ள பெரும் சிந்தனைவாதிகள் உள்ளிட்ட எல்லோருமே சாதியத்தை ஒதுக்கி வைத்து விட்டுத்தான் நம் இனத்தின் அவல நிலையை ஆராய விளைகிறார்கள். அங்குதான், தப்பே ஆரம்பமாகிறது.

ஹாராப்பா, மொகெஞ்ஜோடாரோ காலத்தில் இருந்து ஐயாயிரம் வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக சமுதாயத்தின் ஒவ்வொரு அங்க அசைவையும் பாதித்த ஒரு ஆழமான தொப்பில் கொடி அம்சத்தை ஒதுக்கி வைத்து விட்டு என்ன சமூக ஆராய்ச்சியை நாம் செய்வது?

அப்படி செய்யப் படும் ஆராய்ச்சி நமக்கு எதுவும் நல் வழி காட்டும் என்று நினைக்கிறீர்களா?

தமிழகத்தின் நிலை வேறு. அங்கு தமிழர்களால், தமிழருக்காக என்று அரசாங்கமே நடத்தப் படுகிறது.

மேலும் மேல் சாதிக்காரர்களை பேரளவு ஓரங்கட்டி விட்டு பிற சாதிக்காரருக்கு முன்னுறிமை சட்ட ரீதியாக கொடுக்கப் பட்டு, அரசாங்கம் நடத்தப் படுகிறது. அங்கு சாதியத்தில் குறைந்தவர்கள் தான் 62 வருடங்களாக "பூமிபுத்திராக்கள்". ஆதலால், அங்கு சாதியத்தின் தாக்கத்தை ஆராயாத சமூக அமைப்பு இருக்கலாம்.

ஆனால், மலேசியாவில் நம் நிலைமை வேறு. பெரியார் போன்று இங்கு நமக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த யாரும் இல்லை. பொட்டை கண்ணன்கள் ராஜியத்தில் ஒற்றை கண்ணன் ராஜா என்பது தான் நமது நிலை. எல்லா பிராடுகளிலும், தமிழ் நன்றாக பேசத் தெரிந்த பிராடு தலைவன்.

இதற்கிடையில் மலாய்காரருக்கு தான் முன் உறிமை என்கிற அரசாங்க நிலைப்பாடு. சீனர் எனும் அசாத்திய இனம் நம்மோடு சேர்த்து 'சிறுபாண்மையினர்' என்று முத்திரை குத்தப் பட்டது மற்றொரு நிலைப்பாடு. நம்மோடு வந்து சேர்ந்தெல்லாம் கூலிப் பட்டாளமாக அமைந்தது இன்னுமொரு நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு அத்தனைக்கும் நடுவில், நம் இனம் வழி கண்டு பிடித்து விடியலைத் தேடிச் செல்ல வேண்டும்.

இந்த நிலையில், நம்மை பற்றிய உண்மைகளை மறைத்து, மறந்து வழி கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைப்பது விவேகம் அற்ற செயல். இதனால் தான் சமுதாயத்தைப் பற்றி எத்தனையோ தமிழ் சிந்தனைவாதிகள் எவ்வளவோ பேசியும், எழுதியும் வந்தாலும் நடைமுறையில் அவர்களால் எந்த பிரயோஷனமும் இதுவரை இல்லாது போயுள்ளது.

என்னைக் கேட்டால், மலேசிய தமிழச் சிந்தனைவாதிகள் சாதியம் என்பதையும் அதன் தாக்கத்தையும் அப்பட்டமாக திறந்து பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். உண்மைகளை உண்மைதான் என்று கண்டறிய என்னையா வெட்கம் ?

நம்மை பற்றிய உண்மை நிலைகளை முழுவதுமாக தெரிந்து, அறிந்து, ஏற்றுக் கொண்டு அதன் பின்னர் தான் நம் சமுதாயத்தை நல் வழிப் படுத்த முடியும் என்பது என் கருத்து. ஆனால், அதெல்லாம் நடைமுறையில் சாத்தியப் படாது என்பதும் என் கருத்தே.

Post a Comment